சேலம் மாவட்டம் சூரமங்கலம் அருகே உள்ள ரெட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி இதனுடைய மகள் மற்றும் மருமகன் துபாயில் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு சொந்தமான அடுக்குமாடி வீடு ஒன்று ரெட்டிபட்டி பகுதியில் இருக்கிறது. தன்னுடைய மகளின் வீட்டிற்கு பழனிச்சாமி அவ்வப்போது வந்து கண்காணித்து செல்வது வழக்கம். அதோடு இந்த பங்களாவில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது.
மேலும் பழனிச்சாமியின் மகள் துபாயில் இருந்து கண்காணிப்பு கேமரா மூலமாக வீட்டை கண்காணிப்பது வழக்கமாக நடைபெறும் செயல் என்று கூறப்படுகிறது.
இதனிடையே சென்ற நான்கு மாதத்திற்கு முன்னால் பழனிச்சாமியின் மகள் துபாயில் கண்காணிப்பு கேமராவை பார்த்துக் கொண்டிருந்தபோது 3 பேர் வீட்டுக்குள் வருவதும் அதன் பிறகு கண்காணிப்பு கேமராவை துணியால் மூடி மறைப்பதும் அதில் பதிவானது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக தந்தைக்கு தொலைபேசியின் மூலமாக வீட்டிற்கு யாரோ நுழைந்திருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் பழனிச்சாமி அவருடைய சொந்த ஊரான காமநாயக்கன்பட்டி கோவில் திருவிழாவிற்கு சென்று உள்ளதாகவும் உடனடியாக சென்று பார்ப்பதாகவும் மகளிடம் தெரிவித்துள்ளார். அதன் பிறகு ரெட்டிபட்டி பகுதிக்கு வந்து மகளின் வீட்டிற்கு சென்று பார்த்த போது அங்கு வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதும் வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த 8 லட்சம் ரூபாய் மதிப்பு தானே கார் திருடு போயிருந்ததும் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சூரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து, குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கந்தவேல் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டதில் இந்த கார் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு ஆந்திர மாநிலம் சித்தூர் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, நீதிமன்றத்தின் மூலமாக மனு வழங்கப்பட்டு சித்தூர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையைச் சேர்ந்த திருப்பதி(35), திருப்பத்தூரைச் சேர்ந்த சுதாகர்(34), திருவண்ணாமலை சேர்ந்த கலைச்செல்வன்(35) உள்ளிட்டோரை கைது செய்து சேலத்திற்கு அழைத்து வந்தனர்.
அதன் பிறகு அவர்கள் தெரிவித்தபடி 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான திருடு போன கார் மீட்கப்பட்டது கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டு அதன் பிறகு மறுபடியும் மூவரையும் சித்தூர் சிறையில் சேலம் காவல்துறையினர் அடைத்துள்ளனர்.