தூத்துக்குடியின் 3வது மைல் ஷங்கர் காலணியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன்.இவர் மதுரை புறவழிச் சாலையில் டீக்கடை ஒன்றை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சுப்பிரமணியனின் 2வது மகனான உதயசங்கர் (26) டீக்கடையில் இருந்திருக்கிறார் அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் வாடை வாங்கி உள்ளனர். மேலும் வடைக்கு சட்னி தருமாறு கேட்டதாக தெரிகிறது.
ஆனால் உதவி சங்கர் சட்டினி இல்லை என்று தெரிவித்ததால் மூவரும் சேர்ந்து உதய சங்கரிடம் தகராறு செய்து அவரை அரிவாளால் வெட்டி இருக்கிறார்கள். இதனால் படுகாயம் அடைந்த உதயசங்கர் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.