ராணுவ பயிற்சியின் போது சில நேரங்களில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட்டுவிடும். ராணுவ பயிற்சிகளின் போது அசம்பாவிதங்கள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவது என்பது அவ்வப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கக் கூடிய ஒரு நிகழ்வு. இன்று உலகில் அதிகமான அளவு ராணுவத்திற்கு மக்கள் செலவிடுகின்றனர். ராணுவ வீரர்கள் நம் நாட்டை எதிரிகளிடமிருந்து பாதுகாத்து அதற்காக தங்களது இன்னுயிரையும் தர தயாராக இருப்பதால் நமக்கு அவர்களின் மீது எப்போதும் ஒரு அளவு கடந்த அன்பும் மரியாதையும் இருக்கும் இந்நிலையில் பீகார் மாநிலத்தில் உள்ள கயாவில் ராணுவ பயிற்சி முகாம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
இங்கிருக்க கூடிய ராணுவ வீரர்களுக்கு பயிற்சி செய்வதற்காக சிறப்பு முகாமை உருவாக்கி இருக்கிறது. இந்த முகாமில் வீரர்களுக்கு அடிக்கடி பயிற்சிகள் நடைபெறும். அதேபோன்ற ஒரு பயிற்சி நாளின் போது தவறாக செலுத்தப்பட்ட ஷெல் குண்டு ஒன்று ராணுவ முகாமின் அருகில் உள்ள குலர் வெத் என்ற கிராமத்தில் விழுந்து வெடித்து சிதறியது. இந்தக் கொடூர விபத்தில் மூன்று பேர் பலியாகினர். மேலும் காயமடைந்த பலரும் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்திய ராணுவமும் காவல்துறையும் இணைந்து இச்சம்பவம் தொடர்பாக தீவிரமாக விசாரணை செய்து வருகிறது.