கோவை சித்தாபுதூர் வி.கே.கே மேனன் சாலையில் பாஜகவின் மாவட்ட அலுவலகம் இருக்கிறது இந்த அலுவலகம் மீது கடந்த 2018 ஆம் வருடம் மார்ச் மாதம் 7ம் தேதி அதிகாலை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் குண்டுகளை வீசி சென்றனர் அதில் ஒரு குண்டு பாஜக அலுவலகம் அருகே இருக்கின்ற ட்ராவல் ஏஜென்சி பெயர் பலகை மீது விழுந்து வெடித்தது. அதன் பிறகு அடுத்தடுத்து பாஜக அலுவலகம் மீது வீசப்பட்ட 2 பெட்ரோல் குண்டுகள் சாலையில் நின்றிருந்த ஆட்டோ அருகே விழுந்து வெடித்து சிதறியது.
அந்தப் பகுதியில் இருக்கின்ற கண்காணிப்பு கேமராக்களில் பதிவான இந்த காட்சிகளை கொண்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு திராவிடர் கழகத்தைச் சேர்ந்த ஜீவா என்கின்ற ஜீவானந்தம்(34), கோபால் என்கின்ற பாலன் (41), கௌதம் என்கின்ற கவட்டய்யன்(31) உள்ளிட்டோரை கைது செய்தனர்.
இந்த சமூகத்திற்கு முன்னால் திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதை தொடர்ந்து, பாஜகவின் முன்னாள் தேசிய செயலாளர் எச் ராஜா தமிழ்நாட்டில் பெரியார் சிலைகள் உடைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இதனையடுத்து திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் கோவை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் மனு ஒன்றை வழங்கினார். அதன் பின்னர் திருப்பத்தூரில் பாரதியார் கட்சியின் பிரமுகரால் பெரியார் சிலை உடைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகம் மீது பெட்ரோல் கொண்டு வீசப்பட்டது பின்னர் தெரிய வந்தது. இது குறித்து 2 பிரிவுகளின் கீழ் காட்டூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
கோவையில் இருக்கின்ற குண்டுவெடிப்பு வழக்குகள் விசாரணைக்கான அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்றது. இந்த விசாரணை அனைத்தும் முடிவடைந்த நிலையில், நீதிபதி டி சசிரேகா நேற்று இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கினார் அந்த தீர்ப்பில் கோபால், ஜீவா, கௌதம் உள்ளிட்ட மூவருக்கும் தலா 7 வருடங்கள் சிறை தண்டனையும் தலா 2000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது மேலும் இந்த வழக்கில் சிறப்பு அரசு வழக்கறிஞர் கார்த்திகேயன் ஆஜரானார் என்று சொல்லப்பட்டுள்ளது.