கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது சூலூர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, திமுக சார்பில் கணபதி ராஜ்குமார், அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால், […]

கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் காரை போலீசார் வழிமறித்ததால் பரபரப்பு நிலவியது. கோவை நாடாளுமன்ற தொகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். நேற்று இரவு கோவை சூலூர் பகுதியில் பிரசாரம் செய்தார். இரவு 10 மணிக்கு தனது பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு வாகனத்தில் தனது அறைக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது திடீரென காரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இரவில் மணி 10-ஐ தாண்டியதால் பிரசாரம் செய்ய […]

கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை ஆதரித்து பாஜக மகளிர் அணி சார்பில் நேற்று பேரணி நடைபெற்றது. பாஜக மகளிரணி தேசிய தலைவரும், கோயம்புத்தூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்தப் பேரணியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டார். காந்திபுரம் ஜி.பி. சிக்னல் பகுதியில் தொடங்கி சிவானந்தா காலனி வரை சுமார் 2 கி.மீ., தொலைவுக்கு இந்தப் பேரணி நடைபெற்றது. […]

அரசியல் கட்சியினர் ஓட்டுக்கு பணம் தருவதை, வறுமை சூழ்நிலை கருதி வாங்கி கொள்ளலாம் என்றும், அதே நேரத்தில் நல்லவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் நடிகர் விஜய் ஆண்டனி கூறியுள்ளார். 40 க்கும் மேற்பட்ட படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றிய விஜய் ஆண்டனி “நான்” திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தற்போது விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி மற்றும் மிருணாளினி ரவி நடித்துள்ள ‘ரோமியோ‘ திரைப்படம் வரும் 11ம் தேதி ரிலீசாகிறது. […]

தமிழகத்தில் இதுவரை ஆட்சியில் இருந்த திமுகவோ, அதற்கு முன்பு ஆட்சியில் இருந்த அதிமுகவோ எந்தத் திட்டங்களையும் நிறைவேற்றாமல், தற்போது, நாட்டின் பிரதமருக்கான தேர்தலிலும், அதே பொய்யான வாக்குறுதிகளைக் கொடுக்கிறார்கள் என அண்ணாமலை விமர்சித்துள்ளார், தமிழக பாஜக தலைவரும், கோவை மக்களவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை, பல்லடம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் திறந்த வெளி வாகனத்தில் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது கூட்டத்தில் பேசிய அவர், ”ஏப்ரல் 19 […]

கோவையை அடுத்த சூலூர் அருகே கலங்கல் என்ற இடத்தில் கடந்த 1893-ம் ஆண்டு மார்ச் மாதம் 23-ம் தேதி விவசாய குடும்பத்தில் பிறந்தார். இளம் வயதில் படிப்பில் அதிக நாட்டமில்லாதவராக இருந்த அவர் 4-ம் வகுப்பு வரை மட்டுமே பயின்ற அவர் அறிவு, ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு என தொழில்நுட்ப உலகிற்கு முன்னோடியாக இருந்ததான். அரசு சார்பில் அவரது நினைவாக அவரின் பெயர் சாலைக்கு வைக்கப்பட்டது. இந்த நிலையில் திமுகவை சேர்ந்த […]

கோவை மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் வெள்ள அபாயம் உள்ளதால் பொதுமக்கள் நீர்நிலைகளுக்கு குளிக்கவோ, செல்ஃபி எடுக்கவோ செல்ல வேண்டாம் என ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனை தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பழுதடைந்த கூரை வீடுகள், மண் சுவர் வீடுகள், சிதிலமடைந்த கட்டிடங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் வசிக்கும் பொதுமக்கள் […]

நீலகிரி மாவட்டம் குன்னூர், கோத்தகிரி தாலுக்காகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை‌. திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை கிடையாது. மழை இல்லாத காரணத்தால் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கோவை மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை கிடையாது. மழை இல்லாத காரணத்தால் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம் […]

தமிழகத்தில் 6 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 6 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் படி, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் இணை நிர்வாக இயக்குநராகவும், திட்ட இயக்குநராகவும் (உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி) எம். பிரதாப்பிற்குப் பதிலாக கே. விஜயகார்த்திகேயனை மாநில அரசு நியமித்தது. மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் […]

கோவையில் பல இடங்களில் பெட்ரோல் குண்டு வெடிக்கும் என மின்னஞ்சல் மூலம் மிரட்டல். சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்திற்கு வந்த மின்னஞ்சலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்திற்கு வந்த மின்னஞ்சல் மூலம் கோவையில் பல இடங்களில் பெட்ரோல் குண்டு வெடிக்கும் என என தகவல் சென்றுள்ளது. உடனடியாக போலீசார் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பை தீவிர படுத்தியுள்ளனர். சந்தேகத்திற்கு இடமான நபர்களை காவல்துறையினர் சோதனை செய்து […]