டெல்லி மாநகர பகுதியில் உள்ள முசோரியில் அமைந்துள்ள ஒரு ரயில்வே தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத 3 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இது பற்றி மக்கள் தகவல் அளித்ததன் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
ரயில் மோதியதில் 1 பெண் மற்றும் 2 ஆண்கள் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. இதன் பின்னர் காவல்துறையினர் 3 பேரின் சடலத்தையும் மீட்டு பிரத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சேர்த்தனர்.
புகாரின் பேரில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், இறந்த 3 நபரும் ரயில்வே தண்டவாளத்தில் நின்று கொண்டு ரயில் வருவது கூட தெரியாமல் மும்பரமாக வீடியோ எடுத்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் எதிர்பாராத விதமாக அங்கு வந்த ரயிலானது 3 பேரின் மீதும் மோதியதில் சம்பவ இடத்திலேயே 3 பேரும் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
மேலும் இறந்தவர்கள் யார் என்பதை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அத்துடன் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.