fbpx

நீச்சல் குளத்தில் கிடந்த 3 பெண்களின் சடலம்.. போலீசார் விடுத்த எச்சரிக்கை!!!

சமீப காலமாக மரண செய்திகளை நாம் அதிகம் கேள்வி படுகிறோம். விபத்து, கொலை, தற்கொலை போன்ற செய்திகள் அதிகம் வருகின்றன. நெஞ்சை பதைபதைக்கும் பல செய்திகளை கேட்டு பலர் பயத்தில் இருப்பது உண்டு. ஆனால் இது போன்ற செய்திகள், நாம் கவனமாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது. ஒவ்வொரு செய்திகளை கேட்க்கும் போதும், நாம் இந்த தவறை செய்யாமல் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதை நினைவு படுத்துகிறது. அந்த வகையில், தற்போது நடந்துள்ள சம்பவம் பலருக்கு எச்சரிக்கையாக மாறி உள்ளது.

ஆம், மங்களூருின் புறநகரில் உள்ள உச்சிலா கடற்கரைக்கு அருகே அமைந்துள்ளது ஒரு தனியார் பீச் ரிசார்ட். இந்த ரிசார்ட்டுக்கு மைசூரை சேர்ந்த நிஷிதா, பார்விதி மற்றும் கீர்த்தனா என்ற இளம் பெண்கள் மூன்று பேர் சென்றுள்ளனர். அங்குள்ள நீச்சல் குளத்தில் இளம்பெண்கள் 3 பேரும் குளித்துள்ளனர். ஆனால் திடீரென 3 பேரும் சடலமாக கிடந்துள்ளனர். ஆனால் 3 பெரும் எப்படி இறந்தார்கள் என்பது குறித்து யாருக்கும் தெரியவில்லை.

நீச்சல் குளத்தின் ஒரு பக்கம் 6 அடி ஆழமாக உள்ளதால், முதலில் ஒருவர் உயிரிழந்திருக்க வாய்ப்பு என்றும் அவரை காப்பாற்ற முற்பட்ட மற்ற 2 பெண்களும் நீரில் மூழ்கியிருக்கலாம் என்றும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மேலும், தனியாக நண்பர்களுடன் செல்பவர்கள், நீச்சல் குளம், ஆறு போன்ற நீர் நிலைகளின் ஆழம் தெரியாமல் இறங்க வேண்டாம் என்று போலீசார் எச்சரித்துள்ளனர். இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read more: கர்ப்பிணிகளே.. ஒரே வாரத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க வேண்டுமா? இதை மட்டும் சாப்பிடுங்கள்..

English Summary

3-woman-drowned-in-pool

Next Post

கர்பமாக்கிவிட்டு காணாமல் போன காதலன்; குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்த தாய்..

Sun Nov 17 , 2024
new-born-baby-was-murdered-by-her-own-mother

You May Like