fbpx

பெற்றோர்களின் கவனக்குறைவால் பலாத்காரம் செய்யப்பட்ட 3 வயது குழந்தை..!! கொலை செய்து உடலையும் எரித்ததால் அதிர்ச்சி..!!

நாட்டில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. காவல்துறையினர் இந்த குற்றச்சம்பவங்கள் தடுக்க எவ்வளவு முயற்சி எடுத்தாலும், இந்த வன்கொடுமை சம்பவங்கள் குறைந்த பாடில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். அந்த வகையில், தற்போது 3 வயது குழந்தையை பலாத்காரம் செய்து கொலை செய்ததாக இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் நவம்பர் 1ஆம் தேதியான நேற்று 22 வயது இளைஞர் ஒருவர், தனது உறவினரின் 3 வயது குழந்தைக்கு மிட்டாய் வாங்கிக் கொடுத்துள்ளார். பின்னர், குழந்தையிடன் ஆசையாக பேசி தன்னுடன் அழைத்துச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், குழந்தை அழுது கொண்டே இருந்ததால், செய்வதறியாது தவித்த இளைஞர், குழந்தையை கொலை செய்து உடலையும் எரித்துள்ளார்.

இந்நிலையில், குழந்தை காணாமல் போய்விட்டதாக குழந்தையின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பெற்றோரின் புகாரின் அடிப்படையில் காவல்துறையினரும் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, அந்த இளைஞரிடம் விசாரிக்கும்போது, அவர் முன்னுப்பின் முரணாக பதிலளித்துள்ளார்.

இதையடுத்து, அவரிடம் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில், குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, அவரைக் கைது செய்த காவல்துறையினர், காவலில் வைத்துள்ளனர். மேலும், குற்றம்சாட்டப்பட்ட இளைஞர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு நகரி எம்.எல்.ஏ. கலி பானு பிரகாஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.

Read More : ஆசையாக தல தீபாவளி கொண்டாட வந்த புதுமணப்பெண்..!! ஓட ஓட விரட்டி படுகொலை..!! தூத்துக்குடியில் அதிர்ச்சி..!!

English Summary

The police have arrested a young man for raping and killing a 3-year-old child.

Chella

Next Post

புதிய டிவி சேனலை தொடங்கும் தவெக தலைவர் விஜய்..!! என்ன பெயர் தெரியுமா..?

Sat Nov 2 , 2024
Tamil Nadu Victory Kazhagam President Vijay has decided to start a new TV channel to show Thaveka party news and content as it is.

You May Like