fbpx

700 அடி ஆழ்துளை கிணற்றில் சிக்கிய 3 வயது குழந்தை..!! 10 நாட்களாக இரவு, பகல் பாராமல் மீட்புப் பணி..!! கடைசியில் காத்திருந்த சோகம்..!!

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த டிசம்பர் 23ஆம் தேதியன்று 3 வயது குழந்தை சேத்துனா ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த நிலையில், குழந்தையை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. கோட்புட்லி-பெஹ்ரோர் மாவட்டத்தில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் இருந்த 700 அடி ஆழ்துளைக் கிணற்றுக்குள் குழந்தை தவறி விழுந்தது. 120-வது அடியில் சிக்கி இருந்த குழந்தையை மீட்க மீட்புப் படையினர் போராடி வந்தனர்.

குழந்தை விழுந்த அந்த ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகிலேயே 160 அடி ஆழத்திற்கு ஒரு மிகப்பெரிய குழித்தோண்டப்பட்டு அந்த குழந்தைக்கு நேராக 8 அடிக்கு ஒரு சுரங்கம் தோண்டும் பணி நடைபெற்று வந்தது. குழந்தையை எப்படியாவது உயிருடன் மீட்க வேண்டுமென அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வந்தது. நிலத்திற்கு கீழே கடினமான பாறைகளை துளைக்கும் சவாலான பணிகளையும் மேற்கொண்டனர்.

இரவு பகல் பாராமல் மீட்புப்படையினர், குழந்தையை மீட்கும் பணியில் தொடர்ந்து ஈருபட்டு வந்தனர். இந்த மீட்புப்பணி 10-வது நாளாக நேற்று (ஜனவரி 1) வரை நீடித்து வந்தது. இந்நிலையில், அந்த குழந்தை ஆழ்துளைக் கிணற்றில் இருந்து நேற்று மாலை வெளியே மீட்கப்பட்ட நிலையில், உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால், குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதற்கிடையே, கடுமையான குளிரையும் பொருட்படுத்தாமல் அயராது உழைத்த நிர்வாகம் மற்றும் மீட்புக் குழுக்களின் இடைவிடாத முயற்சிகளுக்கு அந்த குழந்தையின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர். எதிர்காலத்தில் இதுபோன்ற துயரங்கள் ஏற்படாமல் இருக்க, திறந்தவெளி ஆழ்துளை கிணறுகளை மூடுமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.

Read More : ”நம்ம ரெண்டு பேரும் உல்லாசமாக இருக்கலாம்”..!! வீடு புகுந்து இன்ஸ்டா காதலியிடம் பாலியல் சீண்டல்..!! தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்..!!

English Summary

The child was rescued from the borewell yesterday evening and was immediately taken to the hospital.

Chella

Next Post

8ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்..!! மாதம் ரூ.75,000 சம்பளத்தில் வேலை ரெடி..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

Thu Jan 2 , 2025
An employment notification has been issued to fill vacant positions in the Ex-Servicemen Contributory Health Scheme.

You May Like