fbpx

3000 ஆபாச வீடியோக்கள்..!! சைலண்டாக சம்பவம் செய்த கார் டிரைவர்..!! தொகுதி முழுவதும் ’பென் டிரைவ்’..!!

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணா பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் ஆபாச வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மூத்த மகன் ரேவண்ணா. ஜேடிஎஸ் எம்எல்ஏவாக உள்ள ரேவண்ணாவின் மகன் பிரஜ்வல் ரேவண்ணா. இவர் ஹாசன் தொகுதி எம்பியாக மீண்டும் பாஜக கூட்டணியில் ஜேடிஎஸ் சார்பில் போட்டியிட்டுள்ளார். முன்னதாக தேர்தலுக்கு முன்பு ஹாசன் தொகுதி முழுவதும் பென் டிரைவ்கள் விநியோகம் செய்யப்பட்டன. அதில் பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் இடம்பெற்றிருந்தன. மொத்தம் 2,976 ஆபா வீடியோக்கள் இருந்துள்ளன. அதில் பிரஜ்வல் ரேவண்ணா, பெண்களுடன் நெருக்கமாக இருந்துள்ளார்.

இதையடுத்து பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனி சென்றுவிட்டார். தற்போது எஸ்ஐடி எனும் சிறப்பு விசாரணை குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ரேவண்ணா, பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு ஆபாச வீடியோ விவகாரத்தில் பிரஜ்வல் ரேவண்ணா கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதற்கிடையே தான், இந்த ஆபாச வீடியோ எப்படி வெளியானது என்பது பற்றிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதாவது ரேவண்ணா குடும்பத்தில் டிரைவராக இருந்த கார்த்திக்தான் இந்த வீடியோக்கள் அடங்கிய பென் டிரைவை பாஜக பிரமுகர் தேவராஜே கவுடா (ரேவண்ணாவை எதிர்த்து பாஜக சார்பில் ஹேலேநரசிப்புரா தொகுதியில் போட்டியிட்டு தோற்றவர்) வழங்கியதாகவும், ஆனால் இப்போது அந்த வீடியோவை நான் வெளியிடவில்லை எனவும் தெரிவித்துள்ளார். இதன்மூலம் பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ வெளியானதற்கு கார்த்திக் தான் காரணம் என்பது உறுதியாகி உள்ளது. இருப்பினும் இப்போது வெளியிட்டது பாஜகவின் தேவராஜே கவுடாவா? இல்லையெனில், பாஜகவுடன் கூட்டணியில் உள்ளதால் அவர் காங்கிரஸ் கட்சியினரிடம் பென் ட்ரைவை வழங்கினாரா? என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

அதாவது கார்த்திக்கின் சொந்த ஊர் ஹோலோநரசிப்புரா. இந்த தொகுதியின் எம்எல்ஏ தான் ரேவண்ணா. இந்நிலையில் தான் ரேவண்ணாவின் குடும்பத்தில் கடந்த 15 ஆண்டுகளாக டிரைவராக கார்த்திக் பணியாற்றி வந்தார். இவர் ரேவண்ணாவின் குடும்பத்தில் உள்ள அனைவருடன் நெருக்கமாக பழகினார். பிரஜ்வல் ரேவண்ணாவின் செல்போன் உள்பட பிற எலக்ட்ரானிக் பொருட்கள் உள்பட பலவற்றை கையாளும் வகையில் அவர் அதிகாரமிக்கவராக வலம் வந்தார். இதன் மூலம் தான் பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோவை கார்த்திக் பார்த்து பென்ட்ரைவில் ‛காப்பி’ செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் தான் இந்த குற்றச்சாட்டை கார்த்திக் இதற்கு முன்பு மறுத்து இருந்தார். இதையடுத்து தேவராஜே கவுடா பாதிக்கப்பட்ட பெண்களை பத்திரிகையாளர்கள் முன்பு நிறுத்த முயன்றார். ஆனால், கடைசி நேரத்தில் பெண்கள் வரவில்லை. இது தேவராஜே கவுடாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛பெண்களின் மானத்தை கருதி நான் வீடியோ வெளியிடவில்லை. வீடியோ வெளியிட்டால் அது அவர்களின் குடும்பத்தில் பிரச்சனையை ஏற்படுத்தும். மேலும் எந்த பெண்ணாவது தற்கொலை செய்தால் யார் பொறுப்பேற்க முடியும்?” என தெரிவித்திருந்தார்.

ஆனால், ஹாசன் தொகுதி தேர்தலுக்கு ஒருநாள் முன்பாகவே அந்த தொகுதி முழுவதும் பிரஜ்வல் ரேவண்ணாின் ஆபாச வீடியோ அடங்கிய பென் ட்ரைவ் பலருக்கும் வழங்கப்பட்டுள்ளது. அதோடு அதில் உள்ள வீடியோக்கள் வலைதளங்களில் பரப்பப்பட்டன. இந்நிலையில் தான் பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக மாஜி டிரைவர் கார்த்திக் அளித்த பேட்டியில், ”நான் ஆபாச வீடியோ பென்ட்ரைவை தேவராஜே கவுடாவிடம் மட்டுமே வழங்கி உள்ளதாகவும், தான் வீடியோவை பரபரப்பவில்லை எனவும் கூறியுள்ளார். ஆனால் தேவராஜே கவுடா, கார்த்திக் தான் பென்ட்ரைவை காங்கிரஸிடம் வழங்கி வெளியிட்டிருக்கலாம் என்கிறார். கார்த்திக், தேவராஜே கவுடா இடையே தற்போது இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ள நிலையில் வீடியோவை பரப்பியது தொடர்பாக இருவரிடமும் எஸ்ஐடி விசாரணை நடத்த உள்ளது.

Read More : தொடங்கியது மே மாதம்..!! வங்கி விடுமுறையை நோட் பண்ணுங்க..!! இத்தனை நாட்கள் இயங்காதா..?

Chella

Next Post

கோவிஷீல்ட் பக்க விளைவுகள்!… TTS நோய்க்குறி என்றால் என்ன?… காரணங்கள்! அறிகுறிகள்!

Wed May 1 , 2024
covishield: கொரோனா பரவலுக்குப் பிறகு, ஆக்ஸ்ஃபோர்ட்-அஸ்ட்ராஜெனெகா நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட மற்றும் இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட் தயாரித்த கோவிஷீல்டு தடுப்பூசிகள் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. உலகெங்கிலும் உள்ள நாடுகள் இந்த தடுப்பூசியை தங்கள் குடிமக்களுக்கு தொடர்ந்து வழங்குவதால், அரிதான பக்க விளைவுகள் பற்றிய அறிக்கைகள் வெளிவந்துள்ளன, இதில் த்ரோம்போசிஸ் வித் த்ரோம்போசைட்டோபீனியா சிண்ட்ரோம் (TTS) எனப்படும் நிலையும் அடங்கும். இந்நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு அரிதாகவே பக்க விளைவுகள் ஏற்படலாம் […]

You May Like