அசாம் மாநிலத்தில் கடுமையான ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.. ஏறக்குறைய 3,000 பள்ளிகளில் ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அசாம் சட்டமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அம்மாநில கல்வி அமைச்சர் ரனோஜ் பெகு இந்த தகவலை தெரிவித்தார்.. மேலும் பேசிய அவர் 12,731 பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது என்று தெரிவித்துள்ளார்..
போதிய உள்கட்டமைப்பு மற்றும் குடிநீர் வசதி இல்லாததால் பல பள்ளிகள் பாதிக்கப்படுகின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.. 1,616 பள்ளிகளில் சுத்தமான குடிநீர் வசதி இல்லை என்றும், 1,140 பள்ளிகளுக்கு நிரந்தர கட்டிடங்கள் தேவை என்றும், 511 பள்ளிகளுக்கு இன்னும் மின்சாரம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்…
மேலும் பேசிய அவர் “ மாநில அரசின் வித்யாஞ்சலி முயற்சியால் பள்ளிகளுக்கு நன்கொடையாக 71,356 மின்விசிறிகள் பெற்றிருந்தாலும், பற்றாக்குறை நீடிக்கிறது, குறைந்தபட்சம் 48,649 மின்விசிறிகள் இன்னும் தேவைப்படுகிறது.. மேலும், 14,587 பள்ளிகளுக்கு கட்டிடம் புதுப்பிக்க வேண்டும், 22,724 பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறைகள் தேவை.
தொடக்கப் பள்ளிகளில் 5,320 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், மேல்நிலைப் பள்ளிகளில் 9,258 பணியிடங்கள் காலியாக இருக்கிறது.. ஆசிரியர் பற்றாக்குறை பிரச்சினைக்கு தீர்வு காண கல்வித்துறை முயற்சித்து வருகிறது..” என்று தெரிவித்தார்..