அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் தன்சுத்தம், பள்ளி வளாகத் தூய்மை, பள்ளியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பெறுதல், கழிவு மேலாண்மை முறைகளை அறிந்து கொள்ளுதல், மறுசுழற்சி முறைகளின் முக்கியத்துவத்தினை உணர்தல், நெகிழி பயன்பாட்டை குறைத்து இயற்கைக்கு உகந்த மாற்றுப் பொருட்களை பயன்படுத்துவது குறித்த ஊக்கமூட்டும் நடவடிக்கைகள், பள்ளி காய்கறித் தோட்டம் அமைத்தல் ஆகியன குறித்து விழிப்புணர்வு […]

பீகாரில் பணிக்கு வராத 12,987 அரசு பள்ளி ஆசிரியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. பீகார் கல்வித் துறை கடந்த 6 மாதங்களில் பணிக்கு வராத 12,987 அரசு பள்ளி ஆசிரியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஆறு மாதங்களில் விதிமீறல்களில் ஈடுபட்ட 39 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர், அதே சமயம் 13 கல்வியாளர்கள் முன் அனுமதியின்றி ஆறு மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகள் […]

குற்ற வழக்கில் தொடர்புடைய ஆசிரியர்களுக்கு அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது கிடையாது என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; சிறப்பாக செயல்படும் தலைமை ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் ‘அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது’ வழங்கப்படும். இந்த விருது பெறும் 100 தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழும், கேடயமும், பள்ளிக்கு ரூ.10 லட்சம் […]

சென்னையில் இன்று ஆசிரியர்கள் மட்டும் பள்ளிக்கு வர மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவை பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் 2, 3 மற்றும் 4-ம் தேதிகளில் தாக்கிய ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக பெய்த வரலாறு காணாத பெருமழையால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்கள் மிக அதிகமான மழைப்பொழிவை சந்தித்தன. ஆந்திர மாநிலத்தை நெருங்கியவுடன் நெல்லூர், ஓங்கோல் உள்ளிட்ட இடங்களிலும் மழை வெளுத்து வாங்கியது. ஓங்கோல் அருகே […]

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு அரசு உடனே பணி வழங்க கோரி நேற்று சென்னையில் போராட்டம் நடந்தது. போராட்டம் நடத்த முயற்சி செய்த அனைவரையும் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். நேற்று மாலை அவர்களை காவல்துறையினர் விடுதலை செய்தனர். இந்த நிலையில் சென்னை புதுப்பேட்டை சமுதாய நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். மின் விளக்குகளை அணைத்து விட்டு […]

பணி நிரவல் கலந்தாய்வு, நவம்பர் 27-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில்; நடப்பு கல்வியாண்டில் ஆகஸ்ட் 1-ம் தேதி மாணவர் எண்ணிக்கையின்படி அரசுப் பள்ளிகளில் முதுநிலை, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் மேற்கொள்ளப்பட்டன. அதன் அடிப்படையில் உபரி என கண்டறியப்பட்ட ஆசிரியர்களை அந்தந்த மாவட்டத்துக்குள் பணிநிரவல் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணி […]

சத்துணவு தினசரி அறிக்கையை குறுஞ்செய்தியாக காலை 11 மணிக்குள் அனுப்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளி கல்வித்துறை இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில்; அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலனுக்காக சத்துணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது . மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் அளவினை உறுதி செய்திட தானியங்கி கண்காணிப்பு அமைப்பு ( […]

மாணவர்களை ஆசிரியர்கள் தங்கள் சொந்த வேலைக்காக வெளியில் அனுப்பக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 1 முதல் 3-ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 24-ம் தேதியில் இருந்தும், 4 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு செப்டம்பர் 28 ஆம் தேதியில் இருந்தும் காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை முடிவடைந்து 3-ம் தேதி பள்ளிகள் திறக்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், 6 முதல் 12-ம் […]

காலாண்டு விடுமுறையை நீட்டிக்க ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து ஆசிரியர் சங்கம் சார்பில் பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்; காலாண்டு விடுமுறை நாட்களிலும் ஆசிரியர்கள் பள்ளித் தொடர்பான பலப் பணிகளையும், மாணவர்களின் விடைத்தாள்களைத் திருத்தி , மதிப்பெண்கள் வழங்கும் பணிகளையும் மேற்கொள்ள வேண்டி உள்ளது. எனவே இந்த 5 நாட்கள் விடுமுறை போதுமானதாக இல்லை. ஒவ்வொரு ஆண்டும் காலாண்டு விடுமுறை குறைந்தபட்சம் 9 நாட்கள் வழங்கப்படும். இந்த ஆண்டு […]

தமிழகம் முழுவதும் 22, 24 ஆகிய தேதிகளில் ஆசிரியர்களுக்கான கலந்துரையாடல் கூட்டம் நடைபெற உள்ளது ‌. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநர், அனைத்து ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு அனுப்பிய கடிதத்தில்; அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் பணியாளர்களின் கோரிக்கைகளை அறிந்துகொள்ள ஏதுவாகவும், பள்ளிக்கல்வியின் வளர்ச்சி சார்ந்தும் துறையின் அமைச்சர் தலைமையில் கலந்துரையாடல் கூட்டம் சென்னை டிபிஐ வளாகத்தில் ஜூன் 22, 24-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. […]