fbpx

முதியவரின் கிட்னியில் 3,000 கற்கள்..!! அறுவை சிகிச்சை இல்லாமல் அகற்றிய மருத்துவர்கள்..!! குவியும் பாராட்டு..!!

முதியவரின் கிட்னியில் இருந்து 3,000 கற்களை அகற்றி சாதனை படைத்துள்ள மருத்துவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் உள்ள மதனப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் 75 வயது முதியவர். இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அலட்சியத்தோடு இருந்த அவரை, அங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக உறவினர்கள் அனுமதித்துள்ளனர். இதையடுத்து, முதியவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருடைய சிறுநீரகத்தில் கற்கள் இருப்பதை கண்டறிந்துள்ளனர். இதைத் தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை இல்லாமல் கீ ஹோல் முறைப்படி சிகிச்சை அளித்து வெற்றிகரமாக கற்களை மருத்துவர்கள் வெளியே எடுத்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து வெளியே எடுத்த கற்களை எண்ணிப் பார்த்தபோது அந்த எண்ணிக்கை 3 ஆயிரத்தில் முடிவடைந்து மருத்துவர்களையே அச்சுறுத்தியுள்ளது. இவை அனைத்தையும் அறுவை சிகிச்சை இல்லாமல் நவீன சிகிச்சை முறையில், அதுவும் 75 வயது முதியவரின் உடலிலிருந்து வெளியில் எடுத்ததற்காக மருத்துவர்களை அனைவரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் அந்த முதியவர் தற்போது உடல் நலத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Chella

Next Post

மருமகள் நடத்தை மீது சந்தேகம் கொண்ட மாமியார் செய்த செயல்…..! இறுதியில் மருமகளுக்கு ஏற்பட்ட பரிதாபம்……!

Tue Mar 14 , 2023
கடலூர் மாவட்டம் விருதாச்சலம் பகுதியில் வசிக்கும் கலிவரதன், ஆண்டாள் தம்பதிகளின் மகனான முகேஷ் ராஜு என்பவருக்கும், கிருத்திகா என்பவருக்கு திருமணம் ஆகி 2 பெண் குழந்தைகள் இருக்கின்றன. முகேஷ் ராஜ் அவிநாசியில் வேலை பார்த்து வருகின்றார் என்று கூறப்படுகிறது. அவ்வப்போது விடுமுறை கிடைக்கும்போது மட்டும் வீட்டிற்கு வந்து செல்வார். இப்படியான நிலையில், மருமகள் கிருத்திகாவின் நடத்தையில் சந்தேகம் அடைந்த மாமியார் ஆண்டாள், மருமகள் உறங்கிக் கொண்டிருந்த போது வீட்டில் கழிவறை […]

You May Like