fbpx

மேயருக்கு மாதந்தோறும் ரூ.30,000..!! கவுன்சிலர்களுக்கு எவ்வளவு..? அதிரடி உத்தரவு பிறப்பித்த முதலமைச்சர்..!!

மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்களுக்கு மாதந்தோறும் மதிப்பூதியம் வழங்க முதலமைச்சர் முக.ஸ்டாலினிடம் உள்ளாட்சி பிரதிநிதிகள் கோரிக்கை வைத்தனர். இந்தக் கோரிக்கையை பரிசீலித்த முதல்வர், மதிப்பூதியம் வழங்க உத்தரவிட்டுள்ளார். மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள், கவுன்சிலர்களின் மக்கள் நலப் பணிகளைச் சிறப்பித்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் மாதந்தோறும் மதிப்பூதியம் வழங்க முதல்வர் முக.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, மாநகராட்சி மேயர்களுக்கு மாதந்தோறும் ரூ.30,000 மதிப்பூதியம் வழங்கப்படும் என்றும் துணை மேயர்களுக்கு மாதந்தோறும் ரூ.15,000 வழங்கப்படும் என்றும் மாநகராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு மாதந்தோறும் ரூ.10,000 வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். அதேபோல, நகராட்சி மன்றத் தலைவர்களுக்கு ரூ.15,000, துணைத் தலைவர்களுக்கு ரூ. 10,000, நகர் மன்ற உறுப்பினர்களுக்கு ரூ.5,000 மதிப்பூதியமாக வழங்கப்படும். பேரூராட்சி மன்றத் தலைவர்களுக்கு ரூ.10,000, துணைத் தலைவர்களுக்கு ரூ. 5,000, பேரூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு ரூ.2,500 மதிப்பூதியமாக வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.

இந்த மதிப்பூதியம், முழு நேர மக்கள் பணியில் ஈடுபட்டுள்ள உள்ளாட்சி பிரதிநிதிகளை ஊக்குவிக்கும் வகையில் மாதந்தோறும் வழங்கப்படும். இந்த மதிப்பூதியம் ஜூலை மாதம் முதலே வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் முக.ஸ்டாலின் பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்துகிறது TVS நிறுவனம்..!! எதிர்பார்ப்பில் வாடிக்கையாளர்கள்..!! அப்படி என்ன ஸ்பெஷல்..?

Fri Jul 14 , 2023
நாட்டில் வளர்ந்து வரும் எலெக்ட்ரிக் வாகன சந்தையில் TVS நிறுவனத்தின் iQube ஸ்கூட்டர் மிகவும் பிரபலமாக உள்ளது. இந்நிலையில், TVS நிறுவனம் மிக விரைவில் இந்தியாவில் ஒரு புதிய EV ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளது. நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரானது வரும் ஆகஸ்ட் 23ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று லாஞ்ச் ஈவண்ட் குறித்த தகவலில் அந்நிறுவனம் கூறியிருக்கிறது. இந்த அறிவிப்பு எலெக்ட்ரிக் வாகன ஆர்வலர்கள் மற்றும் நிபுணர்கள் […]

You May Like