fbpx

ஆஹா…! தமிழக அரசு வழங்கும் மாதம் தோறும் ரூ.4,000 உதவித்தொகை…! எப்படி விண்ணப்பிப்பது…? முழு விவரம்

வயது முதிர்ந்த தமிழறிஞர்கள், உதவித்தொகை பெற விண்ணப்பிக்க 31-ம் தேதி கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் ஆண்டுதோறும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் 2022-23 ம் ஆண்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 01.01.2022-ம் நாளன்று 58 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.

ஆண்டு வருவாய் ரூ.72,000-க்குள் இருக்க வேண்டும். வட்டாட்சியர் அலுவலகத்தில் இணையவழியில் (ஆன்லைன்) பெறப்பட்ட வருமானச் சான்று, தமிழ்ப்பணி ஆற்றியமைக்கான ஆதாரங்கள் மற்றும் தமிழ்ப்பணி ஆற்றி வருவதற்கான தகுதிநிலைச் சான்று தமிழறிஞர்கள் இரண்டு பேரிடம் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும். இதற்கான விண்ணப்பப்படிவம் நேரிலோ அல்லது தமிழ் வளர்ச்சித் துறையின் வலைத்தளத்திலோ www.tamilvalarchithurai.tn.gov.in என்ற இணையதளத்தில் இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் தோறும் உதவித்தொகையாக ரூ.3,500, மருத்துவப்படி ரூ.500, அவரின் வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை, தங்களது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கிவரும் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் மார்ச் 31-ம் தேதிக்குள் அளிக்க வேண்டும்.

Vignesh

Next Post

18 மருந்து நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்த மத்திய அரசு.. இதுதான் காரணம்...

Wed Mar 29 , 2023
போலி மருந்து உற்பத்தி செய்த 18 மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்து இந்திய மருந்து கட்டுப்பாடு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையம், நாடு முழுவதும் உள்ள 20 மாநிலங்களில் 76 மருந்து நிறுவனங்களை ஆய்வு செய்தது.. போலி மருந்து நிறுவனங்களை ஒடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 15 நாட்கள் மத்திய மற்றும் மாநில குழுக்கள் சார்பில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.. இந்த […]

You May Like