fbpx

சமூக வலைத்தளம் மூலமாக ஏற்பட்ட பழக்கம்…..! காதலியின் அந்தரங்க வீடியோவை வெளியிடுவதாக மிரட்டிய முன்னாள் காதலன் அதிரடி கைது…..!

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே மஞ்சினி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (32) பட்டதாரியான இவர் பிரபல சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமின் மூலமாக சென்னையை சேர்ந்த 23 வயது பட்டாபரிய இளம் பெண்ணுடன் நட்பாக பழகி வந்தார். இது இருவருக்கு இடையில் நாளடைவில் காதலாக மலர்ந்த நிலையில், இருவரும் கடந்த நான்கு மாதங்களாக காதலித்து வந்ததாக தெரிகிறது.

ஆகவே தன்னுடைய காதலியான இளம் பெண்ணுடன் சுரேஷ்குமார் தனிமையில் உல்லாசமாக இருந்திருக்கிறார். அத்துடன் இதனை அந்த பெண்ணுக்கு தெரியாமல் தன்னுடைய செல்போனில் வீடியோ எடுத்திருக்கிறார். இதற்கு நடுவே இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டனர்.

ஆனால் தொடர்ச்சியாக சுரேஷ்குமார் அந்த இளம் பெண்ணுக்கு தொலைபேசி மூலமாக தன்னிடம் பேசுமாறு தொந்தரவு கொடுத்து வந்திருக்கிறார். அதோடு சுரேஷ்குமார் தந்த என் நண்பர்களுடன் பேச வேண்டும் என்று தொடர்ந்து இளம் பெண்ணை வற்புறுத்தி வந்ததாக தெரிகிறது. ஆனால் அந்த இளம் பெண் பேச விரும்பவில்லை என்று தெரிவித்து மறுத்து விட்டார்.

இதனால் ஆத்திரம் கொண்ட சுரேஷ்குமார், தன்னுடைய கைபேசியில் இருவரும் உல்லாசமாக இருந்த வீடியோவை இளம் பெண்ணின் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் அனுப்பி விடுவேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் சமூக வலைதளங்களிலும் வெளியிடுவேன் என்று தெரிவித்துள்ளார். அதோடு தன்னுடைய இச்சைக்கு இணங்க மறுத்தால் வீடியோ வெளிய கொலை செய்து விடுவேன் என்றும் அந்தப் பெண்ணை சுரேஷ் குமார் மிரட்டி இருக்கிறார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண், ஆத்தூர் ஊரக காவல் நிலையத்தில் புகார் வழங்கினார். அதன் அடிப்படையில், காவல்துறையினர் சுரேஷ்குமார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Post

தமிழகம் முழுவதும் நாளை திறக்கப்படுகிறது பள்ளிகள்…..! பெற்றோர்கள் கவலை ஏன் தெரியுமா…..?

Sun Jun 11 , 2023
தமிழ்நாடு முழுவதும் கோடை விடுமுறை முடிவடைந்து நாளை பள்ளிகள் திறக்கப்பட இருக்கிறது. இந்த நிலையில், பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு தேவையான கல்வி உபகரணங்களை வாங்குவதற்கு கடைகளில் குவிந்து வருகிறார்கள். நோட்டு, புத்தகம், டிபன் பாக்ஸ், பேனா, பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வாங்க குழந்தைகள் ஆர்வத்துடன் கடைகளை முற்றுகையிட்டு வருகிறார்கள். ஆனால் கடந்த வருடத்தை விடவும் இந்த வருடம் கல்வி உபகரணங்களின் நிலை கணிசமாக அதிகரித்து இருக்கிறது. சென்ற வருடம் […]
பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தக்கம்...! எப்போது தெரியுமா? பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!

You May Like