fbpx

தமிழகத்திற்கு மட்டும் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.3354.80 கோடி நிதி விடுவிப்பு…!

தமிழ்நாட்டின் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு 2014-ம் ஆண்டு முதல் 2024 ஜனவரி 31 வரை தேசிய கிராமப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் உள்ள தீனதயாள் அந்தியோதயா திட்டத்தின் படி, மத்திய அரசின் நிதியுதவி ரூ.1835.95 கோடியுடன் ரூ. 3354.80 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

மக்களவையில் உறுப்பினர் கே சண்முகசுந்தரம், விஷ்ணு தயாள் ராம் ஆகியோர் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய கிராமத்துறை இணையமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி தனது தனது பதிலில்; தமிழ்நாட்டில் கடந்த பத்து ஆண்டுகளில் 37 மாவட்டங்களில் 3,36,044 மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மகளிர் சுயஉதவிக் குழுக்களில் 40,02,881 பேர் இடம் பெற்றுள்ளனர்.

2014-15 முதல் 2024 ஜனவரி 31-ந் தேதி வரை தமிழ்நாட்டில் உள்ள சுயஉதவிக் குழுக்களுக்கு மத்திய அரசு ரூ.1871.65 கோடி ஒதுக்கியது. அதில் ரூ.1835.95 கோடி நிதி தமிழ்நாட்டுக்கு விடுவிக்கப்பட்டது. அதில் மாநில அரசு பங்கும் சேர்ந்து ரூ.3354.80 கோடி நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

நவகிரகங்களின் தோஷங்களை போக்க இந்த கோயில்களில் வழிபாடு செய்யுங்கள்.!?

Wed Feb 7 , 2024
ஜோதிட சாஸ்திரத்தின் படி நவக்கிரகங்கள் நமக்கு நன்மையை ஏற்படுத்தினாலும், காலநிலை மாற்றத்தினால் நவகிரகங்கள் ஒரு சில ராசியினருக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். அவற்றை போக்க நவகிரகங்களின் கோயில்களில் வழிபாடு நடத்தி பரிகாரங்கள் செய்து வந்தால் தோஷங்கள் நீங்கி வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும். சூரியன் – சூரிய தோஷம் உள்ளவர்கள் திருமங்கலங்குடியில் அமைந்துள்ள பிராண நாதேஸ்வரர் கோயிலில் சென்று வழிபட வேண்டும். பின்பு அங்கு அமைந்துள்ள சூரிய நாராயணர் கோயிலுக்கு சென்று […]

You May Like