fbpx

செம வாய்ப்பு…! காவல்துறையில் 3,359 காலியிடங்கள்…! மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு…!

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் காவல் துறையில் இரண்டாம் நிலை காவலர் (மாவட்ட / மாநகர ஆயுதப்படை) பெண்கள் 780 காலிபணியிடங்கள், இரண்டாம் நிலைக் காவலர் தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 1,819 காலிபணியிடங்கள், சிறைத்துறையில் இரண்டாம் நிலை சிறைக் காவலர் ஆண்கள் 83, பெண்கள் 03 காலிபணியிடங்கள், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையில் தீயணைப்பாளர் 674 காலிபணியிடங்கள் மொத்தம் 3,359 காலிபணிடங்களில் 5% முன்னாள் படைவீரர்கள் மற்றும் படைவீரர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் அப்பணியிடங்களை நிரப்பிட 47 வயது மேற்படாத முன்னாள் படைவீரர்கள் மற்றும் ஓராண்டு காலத்திற்குள் ஓய்வு பெறவுள்ள படைவீரர்கள் ஆகியோர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

எனவே, நாமக்கல் மாவட்டத்தை சார்ந்த 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 01.07.2023 அன்று 47 வயது பூர்த்தி செய்திடாத முன்னாள் படைவீரர்கள் மற்றும் 01.07.2023-க்கு பின்னர் ஓராண்டு காலத்திற்குள் ஓய்வு பெறவுள்ள படைப்பணியில் உள்ள படைவீரர்கள் இப்பணியிடங்களுக்கு 17.09.2023-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பித்த முன்னாள் படைவீரர்கள் / படைவீரர்கள் தாங்கள் விண்ணப்பித்த விபரத்தை முன்னாள் படைவீரர் நல அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு www.tnusrb.tn.gov.in என்ற இணையதள முகவரியினையும், உதவி இயக்குநர், முன்னாள் படைவீரர் நலன், நாமக்கல் அலுவலகத்தை நேரில் அணுகி தெரிந்து கொள்ளலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

இனி ஆசிரியர்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டம்!… அறிவிப்பு வந்தாச்சு!… முழுவிவரம் இதோ!

Sun Aug 27 , 2023
ஜார்கண்ட் மாநிலத்தில் ஆசிரியர்கள் மற்றும் அரசின் சில குறிப்பிட்ட துறைகளின் கீழ் உள்ள ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2004ல் புதிய ஓய்வூதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. அதே ஆண்டு ஜனவரி 1ம் தேதி அல்லது அதற்குப் பின் மத்திய அரசில் சேர்ந்த ஊழியர்களுக்கு, விருப்பத்தின் அடிப்படையில் புதிய ஓய்வூதிய முறை செயல்படுத்தப்பட்டு வருகிறது. புதிய மற்றும் பழைய ஓய்வூதிய திட்டங்களுக்கு இடையே மிகப்பெரிய […]

You May Like