fbpx

AI டெக்னாலஜி மூலம் 36 லட்சம் போலி சிம் கார்டுகள் துண்டிப்பு!… இந்திய தகவல் தொடர்பு துறை!

இந்திய தகவல் தொடர்பு துறை(DoT) AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 36 லட்சம் போலி சிம் கார்டுகளை கண்டறிந்து அவற்றை துண்டித்துள்ளது.

இந்திய தகவல் தொடர்பு துறையான DoT (Department of Telecommunications) போலி சிம்கார்டுகள் மூலமாக நடக்குக்ம் மோசடிகளை தடுக்க செயற்கை நுண்ணறிவு (AI) தொழிநுட்பத்தை பயன்படுத்தி ASTR எனும் தொழில்நுட்பத்தை உருவாக்கியது.இந்த தொழில்நுட்பம் மூலமாக, சிம் கார்டுகளின் ஆதாரங்களை / அடையாளங்களை சரிபார்த்து அவற்றில் சந்தேகத்தின் பெயரில் உள்ளதை துண்டிக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டது. இந்த AI – ASTR தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, 40.87 லட்சம் சிம் கார்டுகள் சோதனை செய்யப்பட்டன.

அதில், 36.61 லட்சம் மொபைல் SIM இணைப்புகள் போலி என கண்டறிந்து, அவற்றை DoT துண்டித்துள்ளது. மேற்கு வங்கத்தில் 12,34,111, ஹரியானாவில் 5,24,287, பீகார் ஜார்கண்ட்டில் 3,27,246, மத்தியப் பிரதேசதத்தில் 2,28,072 மற்றும் உத்தரப் பிரதேசத்தில் 2,04,658 போலி சிம் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கைகள், குஜராத், அசாம், பஞ்சாப், உத்தரகாண்ட், ஒடிசா, தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசம் போன்ற பிற மாநிலங்களிலும் மேற்கொள்ளப்பட்டன.

Kokila

Next Post

ட்விட்டரை தொடர்ந்து கூகுள் அதிரடி!... நீண்ட காலமாக செயலில் இல்லாத கணக்குகள் நீக்கம்!

Thu May 18 , 2023
பாதுகாப்பு காரணங்களுக்காக செயலில் இல்லாத கணக்குகளை கூகுள் நீக்க உள்ளது. உலகில் உள்ள மக்கள் அனைவராலும் கூகுளின் ஜிமெயில் (Gmail), யூடியூப் (Youtube), டிரைவ் (Drive) போன்ற பயன்பாடுகள் பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் உள்நுழைவதற்கு கூகுள் கணக்குத் தேவைப்படும். இதனால் ஒவ்வொரு தனி நபரும் தனக்கென ஒரு கணக்கை உருவாக்கி கூகுளின் பயன்பாடுகளை பயன்படுத்துகின்றனர். ஆனால், தற்பொழுது வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் அனைவரும் ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளை […]
அடுத்த ஆப்பு..!! மூத்த நிர்வாகிகளின் போனஸில் கை வைத்த கூகுள்..!! வெளியான ஷாக்கிங் நியூஸ்..!!

You May Like