fbpx

Election 2024: ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 370 ஓட்டுகள்!… அமித்ஷாவின் திட்டம் என்ன?

Election 2024: மக்களவை தேர்தலில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 370 கூடுதல் வாக்குகளைப் பெறுவதற்கு பாடுபட வேண்டும் என்று தொண்டர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மக்களவை தேர்தல் நெருங்குவதால், மத்தியப் பிரதேசத்தில் கள நிலவரத்தை தேர்தல் கள நிலவரங்களை அறிந்து, மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான உத்திகள் குறித்து அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகளுடன் அமித் ஷா ஆலோசனை நடத்தினார். அப்போது, லோக்சபா தேர்தலுக்கு இன்னும் 100 நாட்கள் உள்ளன என்றும் ஒவ்வொரு வாக்கும் கட்சிக்கு முக்கியமானது, கடந்த தேர்தல்களுடன் ஒப்பிடுகையில், ஒவ்வொரு சாவடியிலும் கூடுதலாக 370 வாக்குகள் பெறுவதை உறுதி செய்யுமாறு வலியுறுத்தியுள்ளார். மக்களவைத் தேர்தலில் பாஜகவின் வாக்குப் பங்கை 10 சதவீதம் அதிகரிக்க பாஜக தொண்டர்கள் பாடுபட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

குறிப்பாக மத்தியப் பிரதேசத்தில் உள்ள 29 மக்களவை தொகுதிகளிலும் வெற்றி பெற பாஜக இலக்கு நிர்ணயித்துள்ளது. 2019 ஆம் ஆண்டு மாநிலத்தில் பாஜக 28 இடங்களில் வெற்றி பெற்றது. முன்னாள் முதல்வர் கமல்நாத்தின் கோட்டையான சிந்த்வாரா, ஒரு இடத்தில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

English Summary: Election 2024 | Union Home Minister Amit Shah has appealed to the volunteers to strive for 370 additional votes in each polling station in the Lok Sabha elections.

Readmore:  சூதாட்ட மோகத்தில் தாய் கொலை.! பணத்திற்காக மகன் செய்த கொடூரம்.!

Kokila

Next Post

cancer-க்கு மருந்தாகும் மசாலா பொருட்கள்!… உலக அரங்கில் எகிறும் எதிர்பார்ப்பு!… 2028க்குள் அறிமுகம்..!

Mon Feb 26 , 2024
cancer: புற்றுநோய்களுக்கு மருந்தை இந்திய மசாலா பொருட்களில் இருந்து கண்டுபிடிக்கும் ஆய்வில் சென்னை ஐஐடி ஈடுபட்டுள்ளது. உலக அளவில் மனிதர்களுக்கு வரும் கொடுநோய்களில் இதய நோய்களை அடுத்து புற்றுநோய்கள்தாம் இருக்கின்றன. புற்றுநோய் என்பது எங்கோ, யாருக்கோ என்றிருந்து, இன்று புற்றுநோயற்றோர் வாழும் ஊர்கள் இந்தியாவில் இருக்கின்றனவா என்று ஐயப்படும்படியான நிலைக்கு வந்துசேர்ந்திருக்கிறோம். 2021 ஆம் ஆண்டில் மட்டும் இரண்டு கோடியே எழுபத்து மூன்று இலட்சமாக இருந்த புற்றுநோயாளிகள் எண்ணிக்கை வரும் […]

You May Like