நம் நாட்டின் அண்டை நாடான சீனாவில் உள்ள ஹெனான் மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு தொழிற்சாலையில், நேற்று முன் தினம் வேலை நடைபெற்று கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக திடீரென பயங்கர தீ பற்றி விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து தகவல் அறிந்து, அந்த பகுதிக்கு 63 தீயணைப்பு வாகனங்களும் அதனுடன் 240 தீயணைப்பு துறை வீரர்களும் வந்தனர். கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் போராடிய பின்னரே தீயை அணைத்துள்ளனர்.
இருந்த போதிலும் இதில் ஏற்பட்ட தீ விபத்தில் 38 நபர்கள் பலியாகி உள்ளனர். மேலும் பலர் பலத்த காயமடைந்துள்ளனர். தீ விபத்துக்கான காரணம் பற்றி எதுவும் தெரியவில்லை. இதனையடுத்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இவ்வாறு அந்த பகுதியில் தீ விபத்து அதிகம் ஏற்பட்டு வருகிறது. இதனால் பல உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. இந்த நிலையில் சந்தேகம் எழுந்ததன் பேரில் சிலரை பிடித்து, காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.