fbpx

#கள்ளக்குறிச்சி :3 வது பெண் குழந்தை என்று கருக்கலைப்பு..உயிரை இழந்த பரிதாபம்..!

கள்ளக்குறிச்சி மாவட்ட பகுதியில் விளாந்தாங்கலில் வடிவேல் (45) என்பவர் ஐடிஐ படித்துவிட்டு, போலி சான்றிதழ் வைத்து அரசிடம் அனுமதி பெற்று தியாகதுருகம், அசகளத்தூர், விருகாவூர் என  5க்கும் மேற்பட்ட இடங்களில் மருந்து கடைகள் நடத்தி வருகின்றார். 

கடலூர் மாவட்ட பகுதியில் கீழக்குறிச்சியில் கோவிந்தராஜ் மற்றும் அமுதா (28) என்ற தம்பதி வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் இருந்த நிலையில் 3வது முறையாக அமுதா கர்ப்பிணியானார். இதனை தொடர்ந்து கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை கண்டறிய முயற்சி செய்துள்ளனர். 

கருவில் இருப்பது பெண் என்றால் கருக்கலைப்பு செய்திட முடிவு செய்வதாகவும், சென்ற 7ம் தேதி தம்பதி இருவரும் தியாகதுருகம் பகுதியில் செயல்பட்டு வருகின்ற மருந்து கடைக்கு சென்றுள்ளனர். அமுதாவின் வயிற்றில் இருப்பது பெண் சிசு என்பது உறுதியானதை தொடர்ந்து அவருக்கு கருக்கலைப்பு செய்ய முடிவு செய்துள்ளனர். அதனால் சென்ற 17ம் தேதி அங்கேயே கருக்கலைப்பு செய்துள்ளனர். 

இதனையடுத்து அமுதாவுக்கு நேற்றைய முன்தினத்தில் ரத்தபோக்கு அதிகபடியாக இருந்ததால் திடீரென மயங்கியாக கூறப்படுகிறது. மருத்துவர்கள் பரிசோதனை செய்த போது, அமுதா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுபற்றி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பின்னர் மருந்து கடையை சுகாதாரத்துறை மற்றும் வருவாய்த்துறை, அதிகாரிகள் முன்னிலையில் மூடி காவல்துறையினர் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். இதனை தொடர்ந்து கடை உரிமையாளர் வடிவேலை கள்ளக்குறிச்சி போலீசார் கைது செய்துள்ளனர். இதற்கிடையே வடிவேலை அழைத்து சென்று புகாரின் பேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Baskar

Next Post

கடைசி டி20 போட்டி..!! கடைசி நேரத்தில் திடீரென விலகிய கேப்டன்..!! ரசிகர்கள் அதிர்ச்சி..!!

Mon Nov 21 , 2022
நாளை நடைபெறும் கடைசி டி20 போட்டியில் இருந்து நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் விலகினார். நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி டி20 போட்டி தொடரில் பங்கேற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி மழையால் ரத்துச் செய்யப்பட்டது. 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என […]
கடைசி டி20 போட்டி..!! கடைசி நேரத்தில் திடீரென விலகிய கேப்டன்..!! ரசிகர்கள் அதிர்ச்சி..!!

You May Like