லடாக்கின் லேவில் பகுதியில் 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. பல பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. மாலை 5:38 மணிக்கு இந்த நிலநடுக்கம் பதிவானது. லேவில் அதன் மையம் 10 கி.மீ ஆழத்தில் இருந்தது. உயிரிழப்பு மற்றும் சேதம் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
கடந்த 28ம் தேதி மியான்மரில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. ஏராளமான கட்டடங்கள் சரிந்து விழுந்ததில், 2,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் தாய்லாந்தின் பாங்காக்கிலும் உணரப்பட்டது. சாதுசாக் பகுதியில் அமைந்துள்ள 30 மாடி கட்டடம் இடிந்து தரைமட்டமானது.
அப்போது, அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மியான்மர், தாய்லாந்தில் ஏற்பட்ட நில அதிர்வு உலகையே உலுக்கிய நிலையில் லடாக்கில் ஏற்பட்ட நில அதிர்வால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
Read more: போலி ஆவணங்கள் மூலம் இந்திய குடியுரிமை..? சின்னத்திரை காமெடி நடிகை தாப்பா மீது வழக்குப்பதிவு..!!