நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்துள்ள கொத்தங்குடி பகுதியை சேர்ந்த தனபால் காவல்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர், இவரது வீடு மற்றும் தோட்டத்தை சுற்றி பாதுகாப்புக்காக வலையுடன் கூடிய மூங்கில் வேலி அமைத்துள்ளார். இந்நிலையில் அவரது தோட்டத்தை பணியாளர்கள் சுத்தம் செய்த போது கொடிய விஷம் கொண்ட 4 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு தப்பி செல்ல முயன்ற போது, அங்குள்ள வேலியில் சிக்கிக்கொண்டது.
அதனை தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் தீயணைப்பு துறையினரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில், தலைஞாயிறு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் சிறப்பு நிலை அலுவலர் செல்வராஜ் தலைமையில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்
தொடர்ந்து 1 மணிநேர போராட்டத்திற்கு பிறகு கொடிய விஷம் கொண்ட கண்ணாடி விரியன் பாம்பை லாவகமாக பிடித்து வனத்துறையினர் மூலமாக பாதுகாப்பாக வன பகுதிக்குள் விடப்பட்டது. கொடிய விஷம் கொண்ட கண்ணாடி விரியன் பாம்பு பிடிப்பட்ட நிலையில் கிராம மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்