fbpx

குஜராத்தில் 4 ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் கைது..!

ஐஎஸ்ஐஎஸ் சர்வதேச பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 4 நபர்களை அகமதாபாத் விமான நிலையத்தில் வைத்து, குஜராத் காவல்துறையின் பயங்கரவாத தடுப்பு படையினர் இன்று கைது செய்துள்ளனர்.

ஐஎஸ்ஐஎஸ் சர்வதேச பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 4 நபர்களை அகமதாபாத் விமான நிலையத்தில் வைத்து, குஜராத் காவல்துறையின் பயங்கரவாத தடுப்பு படையினர் இன்று கைது செய்துள்ளனர். அகமதாபாத் நகரின் சர்தார் வல்லபாய் படேல் அனைத்துலக விமான நிலையத்தில் அந்த நான்கு பயங்கரவாதிகளும் சுற்றி வளைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த நால்வரும் இலங்கைக் குடிமகன்கள் என்பதும் இலங்கையில் இருந்து சென்னை வழியாக அகமதாபாத் வந்தார்கள் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.

சந்தேகத்துக்குரிய அந்த பயங்கரவாதிகள், பாகிஸ்தானில் இருந்து அனுப்பப்படும் தகவலுக்காக விமான நிலையத்தில் காத்திருந்தபோது அதிகாரிகளிடம் சிக்கியதாகவும் தொலைக்காட்சிகளில் வெளியான செய்திகள் குறிப்பிட்டன. கைது சம்பவத்தைத் தொடர்ந்து விமான நிலையப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

அகமதாபாத்திற்கு வந்த பயங்கரவாதிகளின் நோக்கத்தை கண்டறிய, தற்போது ரகசிய இடத்தில் அவர்களை வைத்து ஏடிஎஸ் விசாரித்து வருகிறது. 4 பேரும் இலங்கையில் இருந்து சென்னை வழியாக அகமதாபாத் சென்றதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பயங்கரவாதிகள் நால்வரும் தங்களது திட்டமிட்ட இலக்கை அடைவதற்கு முன்பே குஜராத் ஏடிஎஸ் அவர்களை கைது செய்தது. இந்த பயங்கரவாதிகள், பாகிஸ்தானில் உள்ள தங்களது கையாளுபவர்களின் உத்தரவுக்காக காத்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மறைவிடங்களில் இருந்து தங்களைச் சேர வேண்டிய ஆயுதங்கள் அல்லது வெடிப்பொருட்களுக்காக அவர்கள் எதிர்பார்த்திருந்ததும் முதற்கட்ட விசாரணையில் புலப்பட்டது. மூன்று ஐபிஎல் குழுக்கள் அகமதாபாத் விமான நிலையம் வந்து சேர வேண்டிய நிலையில் அங்கு இந்தக் கைது சம்பவம் நிகழ்ந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Post

இந்தோனேஷியாவில் தடம்பதிக்கும், எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் செயற்கைக்கோள் இணைய சேவை!

Mon May 20 , 2024
இந்தோனேசியாவின் மிகப்பெரிய பாலி தீவு பகுதியில் வசித்து வரும் மக்கள் பயனடையும் வகையில் தனது ஸ்டார்லிங்க் சாட்டிலைட் இணைய சேவையை எலான் மஸ்க், ஞாயிற்றுக்கிழமை அன்று தொடங்கி வைத்தார். இதற்காக அவர் அந்த நாட்டுக்கு பயணித்தார். டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் சமூக ஊடக தளமான எக்ஸ்-ன் உரிமையாளர் எலான் மஸ்க். உலகின் பெரும் பணக்காரர். இவர் தற்போது உலகின் மிகப்பெரிய தீவுக்கூட்டங்களை கொண்ட நாடான இந்தோனேசியாவில் தடம் பதித்துள்ளார். தனது […]

You May Like