fbpx

ஒரு தலை காதல்.? ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் படுகொலை… கைது செய்யப்பட்ட ஏர் இந்தியா ஊழியர்.!

கர்நாடக மாநிலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக ஏர் இந்தியா ஊழியரை கைது செய்துள்ள காவல் துறையினர் அவரிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கர்நாடக மாநிலம் வில்காபி மாவட்டத்தை சேர்ந்தவர் ஹசீனா. 46 வயதான இவருக்கு அய்னாஸ் (23), அஃப்னான்(23) மற்றும் அசெம்(12) என்ற மூன்று குழந்தைகள் இருந்தனர். இவரது கணவர் துபாயில் வேலை பார்த்து வந்த நிலையில் ஹாஜிரா என்ற தனது உறவினருடன் இவர் கர்நாடகாவில் வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 12ம் தேதி இவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் ஹசீனா மற்றும் அவரது குழந்தைகளை கத்தியால் கொடூரமாக தாக்கினார். இதில் சம்பவ இடத்திலேயே கசினா மற்றும் அவரது குழந்தைகள் உயிரிழந்தனர். மேலும் அவரது உறவினரான ஹாஜிரா படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

காவல்துறையின் தீவிர விசாரணையில் இந்த கொலையில் ஈடுபட்டவர் ஏர் இந்தியாவில் கேபின் க்ரூவாக பணியாற்றி வரும் பிரவீன் அருண் கௌகுலே(35) என்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து குடி ஆட்சி பகுதியில் பதுங்கி இருந்த அவரை காவல்துறை கைது செய்தது. மேலும் காவல்துறையின் முதல் கட்ட விசாரணையில் ஹசீனாவின் மகளான அய்னாஸை ஒருதலையாக காதலித்து தொந்தரவு செய்து வந்தது தெரிய வந்திருக்கிறது. எனினும் இந்த கொலை காதலுக்காக நடைபெற்றதா அல்லது வேறு ஏதேனும் பின்புலம் இருக்கிறதா என்பது தொடர்பாக காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

Kathir

Next Post

38 வயது பெண் மருத்துவருக்கு நேர்ந்த கொடூரம் … நட்பாக பழகிய நபர் செய்த வன்கொடுமை.!

Thu Nov 16 , 2023
மகாராஷ்டிரா மாநில தலைநகரமான மும்பையில் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக ஒரு நபரை கைது செய்து காவல் துறை விசாரணை செய்து வருகிறது. பெண் மருத்துவர் தனது கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் பேட்மிட்டன் விளையாடுவதற்காக கிளப்பிற்கு சென்றபோது அங்கு ஒரு நபருடன் பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது. பின்னர் இந்த பழக்கம் நட்பாக மாறியுள்ளது. […]

You May Like