கர்நாடகா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கிடா வாடா என்கிற அருவிக்கு சுமார் 50 பெண்கள் சுற்றுலா சென்றுள்ளனர். அதில் 5 பெண்கள் அருவியின் அருகே சென்று செல்பி எடுக்க முயன்றுள்ளனர்.
அப்போது திடீரென அருவிக்குள் தவறி விழுந்து விட்டனர். விழுந்ததில் 4 பெண்கள் அருவியில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இதனையடுத்து மேலும் ஒரு பெண் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பெலகாவி மாவட்ட பகுதியில் இருந்து சுமார் 40 பெண்கள் கொண்ட குழு நேற்று கிடாவாடா பகுதியிக்கு சுற்றுலாவாக அருவிக்கு சென்றிருந்தது. இந்த நிலையில் அருவியில் மூழ்கி 4 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த பெண்கள் ருக்காஷர் பிஸ்டி (20), உஜ்வாலை சேர்ந்த ஆசியா முஜாவர் (17), ஜபாத் காலனியில் வசிக்கும் தஸ்மியா (20) அனகோலாவில் வசித்த குட்ஷியா ஹசம் படேல் (20), ஆகிய நபர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இவர்களின் உடல்கள் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டது.