fbpx

40 பேர் பலி!… விபத்தில் சிக்கிய டேங்கர் லாரி!… பெட்ரோல் திருட சென்ற மக்கள்!… தீப்பிடித்து வெடித்து சிதறும் பகீர் காட்சிகள்!

லிபிரியா நாட்டில் சாலை ஓரத்தில் கவிழ்ந்து கிடந்த எரிபொருள் ஏற்றிச் சென்ற டேங்கர் ஒன்றிலிருந்து மக்கள் எரிபொருள் திருடிய பொழுது அது திடீரென வெடித்த சிதறியதில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

கடந்த வியாழன் டிசம்பர் 28ஆம் தேதி, லிபிரியா நாட்டில் உள்ள டோட்டோட்டா (Totota) என்கின்ற நகரத்தில் ஒரு அதிர்ச்சி தரும் சம்பவம் நடந்துள்ளது. டோட்டோட்டா நகரப் பகுதியில் சென்று கொண்டிருந்த ஒரு பெட்ரோல் டேங்கர் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே கவிழ்ந்து விழுந்துள்ளது, பின் அதிலிருந்து பெட்ரோல் கசிய துவங்கியுள்ளது. இதை பார்த்த அங்கிருந்த மக்கள் தங்களிடமிருந்த பாத்திரங்களில் அதை எடுத்துச் செல்ல துவங்கியுள்ளனர். ஒரு சிலர் எரிபொருள் எடுப்பதை பார்த்து ஒரு பெரிய அளவிலான மக்கள் கூட்டமே அந்த லாரியின் அருகில் கூடி அங்கு கவிழ்ந்து கிடந்த டேங்கரிலிருந்து எரிபொருளை சேமிக்க துவங்கியுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் பெட்ரோலை திருடிக்கொண்டிருந்த நேரத்தில் திடீரென அந்த டேங்கர் லாரி வெடித்து சிதறி உள்ளது.

இதில் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி 40ம் மேற்பட்ட மக்கள் இறந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் 83 பேர் இந்த விபத்தில் காயம் அடைந்துள்ளதாகவும் குறிப்பிடுகிறது. இந்த காட்சி அருகில் இருந்த ஒருவரால் படமாக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. பலரின் சிதறிய உடல் பாகங்களைக் கொண்டு அவர்கள் யார் என்று கண்டுபிடிக்க முடியாது நிலையில் பலரின் உடல்களை ஒரே இடத்தில் அடக்கம் செய்துள்ளதாக அந்த நகர சுகாதார அதிகாரி சிந்தியா என்பவர் தகவல் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த விபத்தில் பலி எண்ணிக்கை அதிகமாக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Kokila

Next Post

கோடி ரூபாய்க்கு மரங்கள் கடத்தி விற்பனை.! வசமாக சிக்கிய பாஜக எம்பி-யின் சகோதரர்.! அதிர்ச்சி ரிப்போர்ட் .!

Sun Dec 31 , 2023
கர்நாடக மாநிலத்தின் வனப்பகுதியில் இருந்து பழமையான மரங்களை கடத்தி விற்பனை செய்த வழக்கில் பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த எம்பி-யின் சகோதரர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக வனத்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர். கர்நாடக மாநிலத்தின் ஹாசன் மாவட்டத்திலுள்ள அரசுக்கு சொந்தமான இடத்திலிருந்து பழமை வாய்ந்த மரங்கள் வெட்டி கடத்தப்படுவதாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சம்பவ […]

You May Like