நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைக்கு எதிராக பல்வேறு சட்டங்கள் இருந்தாலும், அதன்படி தண்டிக்கப்பட்டாலும் கூட இது போன்ற தவறுகள் குறைந்தபாடில்லை. இதற்கெல்லாம் காரணம் என்ன? என்று யோசித்தால் ஒட்டுமொத்தமாக இந்த நாட்டில் இருக்கின்ற வரையறையை சரி இல்லை என்று தோன்றுகிறது.
உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தில் இருக்கின்ற ராம்நகர் பகுதியில் ரிங்கு வர்மா(40) என்பவருக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. அதே பகுதியைச் சேர்ந்த 5 வயது இஸ்லாமிய சிறுமி ஒருவர் ரிங்கு வர்மாவின் மகனுடன் நாள்தோறும் வந்து விளையாடுவார் என்று கூறப்படுகிறது.
இப்படி வழக்கம் போல ரிங்கு வர்மாவின் மகனுடன் வந்து விளையாடிய அந்த சிறுமி வெகு நேரம் ஆன பிறகும் வீடு திரும்பவில்லை. இதனால், அந்த சிறுமியின் பெற்றோர் அச்சமடைந்து அந்த குழந்தையை காணவில்லை என்று ஊர் முழுவதும் பரபரப்பாக தேடத் தொடங்கினர். இந்த சூழ்நிலையில் தான் அந்த சிறுமியுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் தன்னுடைய தந்தை தான் அந்த சிறுமியை அழைத்துச் சென்றதாக கூறி இருக்கிறார்.
இதன் பிறகும் பல மணி நேரம் அந்த குழந்தையை பல்வேறு பகுதிகளில் அந்த குழந்தையின் குடும்பத்தினரும், பெற்றோரும் தேடிப் பார்த்த நிலையில், அந்த குழந்தை ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில், ஒரு கரும்பு தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. பின்பு அந்த குழந்தையை மீட்டு பெற்றோர் மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து ரிங்கு வர்மாவை கைது செய்த காவல்துறையினர் அவரை சிறையில் அடைத்திருக்கிறார்கள்.
இதன்பிறகு பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் ஊடகங்களுக்கு வழங்கிய பேட்டியில் என்னுடைய மகளை பலாத்காரம் செய்த ரிங்கு வர்மா கரும்பு தோட்டத்தில் அவரை போட்டுவிட்டு சென்று விட்டார். அலங்கோலமாகக் கிடந்த என்னுடைய மகளின் நிலையை கண்டவுடன், என் மகள் இறந்துவிட்டார் என்று தான் நினைத்தேன் என கூறியுள்ளார்.
ஏனெனில், அந்த அளவிற்கு ரத்த வெள்ளத்தில் அவர் கிடந்தார் என்றும், என்னுடைய மகளை பலாத்காரம் செய்த பின்னர் அவரை கொலை செய்ய அந்த மிருகம் முடிவு செய்தது எனவும் மேலும் ரிங்கு வர்மா மீது காவல் நிலையத்தில் நாங்கள் புகார் வழங்கினோம். அந்த புகாரின் அடிப்படையில் தான் காவல்துறையினர் அவரை கைது செய்து இருக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார் அந்த பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய்.