fbpx

அட்டகாசம்…! தமிழகத்தில் 400 மெகாவாட் சூரிய சக்தி மின் திட்டம்…! எங்கே சென்று வாங்குவது..? முழு விவரம்…

2023 ஜனவரி முதல் சூரிய சக்தி மூலம் ஆயிரம் மெகா வாட் மின் உற்பத்தி செய்யும் திட்டம் தொடங்கப்பட உள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது; எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் முதன் முறையாக தமிழகத்தில் சூரிய சத்தி மூலம் மின்சாரம் தயாரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் முதல் கட்டமாக 400 மெகாவாட் சூரிய சக்தி மின்சாரம் உற்பத்தி தொடங்கப்பட உள்ளது. இதற்காக தமிழ்நாடு மின்சார வாரியம் 3 ஆயிரத்து 263 ஏக்கர் நிலம் வாங்கியிருப்பதாகவும், காற்றாலை மின்சாரம் தயாரிப்பதில் முதல் மாநிலமாக தமிழ்நாடு தற்போது வரை சிறப்பாக இருந்து வருவதாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

சூரியசக்தி மூலம் மின்சாரம் தயாரிப்பதில் இந்திய அளவில் தமிழ்நாடு நான்காவது இடத்தில் இருந்து வருவதாக கூறினார். ஜனவரி முதல் கரூர், செங்கல்பட்டு, சேலம், உள்ளிட்ட மாவட்டங்களில் சூரிய சக்தி மூலம் ஆயிரம் மெகா வாட் மின் உற்பத்தி செய்யும் திட்டம் தொடங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

இந்த சோலார் பேனல்களை எங்கே வாங்குவது..?

சோலார் பேனல்களை வாங்க மாநில அரசின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு ஆணையத்தை நீங்கள் தொடர்பு கொண்டு அதன்மூலம் நீங்கள் பெறலாம். இதற்கு என்று அணைத்து மாநிலங்களின் முக்கிய நகரங்களில் அலுவலகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நகரத்திலும் உள்ள தனியார் விற்பனையாளர்களிடமும் சோலார் பேனல்கள் கிடைக்கின்றன. மானியத்திற்கான படிவம் அதிகார அலுவலகத்திலிருந்து கிடைக்கும். மேலும் நீங்கள் வாங்கும் சோலார் பேனல்கள் 25 வருடம் வரை எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் செயல்படும்.

Vignesh

Next Post

Pension... வரும் டிச: 31-ம் தேதி வரை கால அவகாசம்...! உடனே இதை சமர்ப்பிக்க வேண்டும்...! இல்லை என்றால் சிக்கல்....!

Sun Nov 20 , 2022
சென்னை துறைமுக ஆணையம் மற்றும் கப்பற்கூட வாரியம் ஆகியவற்றின் ஓய்வு பெற்றவர்களுக்கான, 2022 ஆம் ஆண்டிற்கான ஆயுள் சான்றிதழ் சரிபார்க்கும் பணி 1.11.2022 முதல் தொடங்கியுள்ளது. ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் தங்களின் ஆயுள் சான்றிதழை நேரடியாக வந்து சமர்ப்பித்தலை தவிர்க்கும் வகையில், கீழ்கண்ட வழிமுறைகளை ஓய்வூதியதாரர்களின் வசதியை கருதி சென்னைத் துறைமுக ஆணையம் செய்துள்ளது. எப்படி அனுப்புவது…? ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர், தங்களின் ஆயுள்சான்றிதழை கணினி மூலம் […]

You May Like