fbpx

ரேஷன் கடைகளில் 4,000 பணியிடங்கள்… தமிழக அரசு வெளியிட்ட குட்நியூஸ்..

ரேஷன் கடைகளில் காலியாக உள்ல 4,000 பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது..

தமிழ்நாட்டில் சுமார் 33,000 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றனர்.. இந்த கடைகளில் விற்பனையாளர், எடையாளர் பகுதிகளில் 25,000 பேர் பணியாற்றி வருகின்றனர். எனினும் பணியாளர் பற்றாக்குறை, ஒரே நபர் 2 அல்லது 3 ரேஷன் கடைகளை கூடுதலாக கவனிக்கும் சூழல் நிலவுகிறது.. இதனால் ஊழியர்களுக்கு கடும் பணிச்சுமை ஏற்பட்டுளது..

இதனிடையே தமிழக சட்டப்பேரவையில் கூட்டுறவு துறை அமைச்சர் ஐ. பெரியசாமி பேசிய போது, ரேஷன் கடைகளில் காலியாக சுமார் 4000 பணியிடங்கள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நிரப்பப்படும் என்று கூறியிருந்தார்.. இந்த நியமனங்களுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்பட்டது..

இந்நிலையில் ரேஷன் கடைகளில் 4000 விற்பனையாளர், கட்டுநர் பணியிடங்களை மாவட்ட ஆட்சேர்ப்பு மையங்கள் மூலம் நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.. விற்பனையாளர் பணிக்கு +2 அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி, கட்டுநர் பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

Maha

Next Post

காமராஜரைப் பற்றி தவறாகப் பேசிய திமுக முன்னாள் எம்பி..!! வலுக்கும் கண்டனம்..!!

Wed Sep 28 , 2022
பெருந்தலைவர் காமராஜரைப் பற்றி தவறாகப் பேசிய திமுகவின் முன்னாள் பாராளுமன்ற மேலவை உறுப்பினருக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் எம்பி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தன்னலம் இல்லாமல் பொதுநலத்தோடும், தேசநலத்தோடும், தொலைநோக்கு பார்வையோடும் பல்வேறு திட்டங்களை அளித்து இந்நாடு வளர்ச்சியடைவதன் இறுதி மூச்சுவரை உழைத்த உத்தமர் கர்மவீரர் காமராஜர். இந்நாட்டையே வீடாகவும், மக்களையே குடும்பமாகவும் நினைத்து வாழ்ந்த தவயோகி. நாடும், நாட்டின் மக்களின் […]

You May Like