fbpx

மக்களே உஷார்…! ஆதார் வாங்கும் முன் இதை கட்டாயம் சரி பார்க்க வேண்டும்…! ஆணையம் உத்தரவு…!

ஆதார் அட்டையை தனிநபரின் அடையாளமாக ஏற்பதற்கு முன்பு அதனை கட்டாயம் பரிசோதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் அட்டையை எந்த வடிவில் வழங்கினாலும், அடையாளமாக ஏற்கும் முன்பு அதனை தீவிரமாக பரிசோதிக்க வேண்டும் என இந்திய தனித்துவ அடையாள ஆணையமான (யுஐடிஏஐ) தெரிவித்துள்ளது. ஆதார் அட்டை, இ-ஆதார், ஆதார் பிவிசி அட்டை மற்றும் எம் ஆதார் என எந்த வடிவில் ஆதார் அட்டை வழங்கப்பட்டாலும் அதன் உண்மை தன்மையை பரிசோதித்து உறுதி செய்யவேண்டும் என தெரிவித்துள்ளது.

சமூக விரோதிகள் 12 இலக்க எண்கள் கொண்ட ஆதார் அட்டையை தவறுதலாக பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆதார் எண் என தனிநபர் வழங்கும் 12 இலக்க எண்ணை அப்படியே ஏற்கக்கூடாது. ஆதார் அட்டையை தனிநபரின் அடையாளமாக வழங்கப்படும் போது, அந்த எண்ணை பயன்படுத்துவதற்கு முன்பு அதன் உண்மைத் தன்மையை பரிசோதித்து அறியவேண்டியது அவசியம் என அனைத்து மாநில அரசுகளுக்கும் யுஐடிஏஐ அறிவுறுத்தியுள்ளது.

எம்-ஆதார் செயலி, (M-Aadhaar -app) ஆதார் க்யூ ஆர் கோட் ஸ்கேனர் (Aadhaar OR code Scanner) ஆகியவற்றின் மூலம் ஆன்டராய்டு வசதியை பயன்படுத்தி தீவிரமாக பரிசோதிக்க வேண்டும்.

Vignesh

Next Post

மாணவனின் பிறப்புறுப்பை நசுக்கி வாயில் அசிங்கமான செயலை செய்த சக மாணவர்கள்..!! சென்னையில் பயங்கரம்

Fri Nov 25 , 2022
கே.கே.நகரில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவனை சக மாணவர்கள் ராகிங் செய்து பிறப்புறுப்பை நசுக்கி தாக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கே.கே.நகர் நடேசன் சாலையில் மத்திய அரசின் கீழ் இயங்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இந்நிலையில், கடந்த 21ஆம் தேதி எம்ஜிஆர் நகரை சேர்ந்த பவுன் ராஜ் என்பவர் கே.கே.நகர் […]

You May Like