தெற்கு மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள 4103 அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு செயல்முறையை விரைவில் முடிவடைய உள்ளது. ஏசி மெக்கானிக், கார்பெண்டர், எலக்ட்ரீசியன், எலக்ட்ரானிக் மெக்கானிக், ஃபிட்டர், பெயிண்டர் போன்ற தொழில்களில் பயிற்சி பெறுவதற்கு ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் தென்கிழக்கு ரயில்வேயின் scr.indianrailways.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடுவதன் மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்யலாம்.
தெற்கு மத்திய ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மொத்தம் 4103 அப்ரண்டிஸ் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.. இதில் ஏசி மெக்கானிக் – 250 பணியிடங்கள், கார்பென்டர் – 18 பணியிடங்கள், டீசல் மெக்கானிக் – 531 பணியிடங்கள், எலக்ட்ரீசியன் – 1019 பணியிடங்கள், எலக்ட்ரானிக் மெக்கானிக் – 92 பணியிடங்கள், ஃபிட்டர் – 1460 பணியிடங்கள், மெஷினிஸ்ட் – 71 பணியிடங்கள், மெக்கானிக் மெஷின் டூல் 5 மெஷின் – 05 , மில் ரைட் பராமரிப்பு (MMW) – 24 பணியிடங்கள், பெயிண்டர் – 80 பணியிடங்கள் மற்றும் வெல்டர் – 553 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன..
அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் இருந்து 10-ம் வகுப்பு, ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.. வயது வரம்பு, குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் மற்றும் அதிகபட்சம் 24 ஆண்டுகள் இருக்க வேண்டும். இருப்பினும், அரசு விதிமுறைகளின்படி ஒதுக்கப்பட்ட பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பு பற்றிய முழுமையான தகவலுக்கு, அறிவிப்பை பார்வையிடவும்.. இந்த ஆட்சேர்ப்புக்கான விண்ணப்ப செயல்முறை கடந்த டிசம்பர் 30-ம் தேதி தொடங்கியது.. தகுதியானவர்கள் ஜனவரி 29, 2023 மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
ஆட்சேர்ப்புக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு : http://34.93.184.238/NOTIFICATION_03-NOV-2022_ISSUED_BY_RRC-SC.pdf
ஆன்லைனில் விண்ணப்பிக்க : http://34.93.184.238/instructions.php