உடல் உறுப்புகளைத் தானம் செய்யும் அரசு ஊழியர்களுக்கு சலுகை மற்றும் ஊக்கத்தொகை வழங்கி வருகிறது. மேலும் மத்திய அரசு ஊழியர்களுக்கு தங்கள் உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு அதிகபட்சமாக 42 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் பாதுகாப்பு
பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் உரிய நேரத்தில் புலன் விசாரணை மேற்கொள்வது, குற்றத் தடுப்பு, புலனாய்வு திறனை மேம்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை உறுதி செய்வதற்காக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து “பெண்களின் பாதுகாப்பு” என்ற ஒருங்கிணைந்த பெருந்திட்டத்தின் கீழ் ஆறு திட்டங்களை உள்துறை அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது.
காவல்துறையை பெண்கள் எளிதில் அணுகும் வகையில் காவல் நிலையங்களில் பெண்கள் உதவி மையங்களை அமைப்பதற்கு உள்துறை அமைச்சகம் நிதியுதவி வழங்குகிறது. இதுவரை, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 14,658 பெண் உதவி மையங்கள் செயல்பாட்டில் உள்ளன. அவற்றில் 13,743 மையங்கள் பெண் அதிகாரிகளால் வழிநடத்தப்படுகின்றன.
மேலும் கூடுதலாக, அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் 827 ஆட்கடத்தல் தடுப்பு பிரிவுகள் நிறுவப்பட்டுள்ளன. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றத் தடுப்புத் திட்டம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் செயல்படுத்தப்படுகிறது. இதுவரை, 33 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் சைபர் தடயவியல் பயிற்சி ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் காவல்துறை அதிகாரிகள், நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் உட்பட 24,624-க்கும் மேற்பட்ட அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்கள் குறித்து புகார் அளிப்பதற்கான இணையதளமும் செயல்பாட்டில் உள்ளது என நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் பண்டி சஞ்சய் குமார் தெரிவித்துள்ளார்.