fbpx

அரசு ஊழியர்களுக்கு இனி 42 நாட்கள் சிறப்பு விடுப்பு..!! மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

உறுப்பு தானம் செய்யும் அரசு ஊழியர்களுக்கு 42 நாட்கள் சிறப்பு விடுப்பு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இது குறித்து மத்தியப் பணியாளர் மற்றும் பயிற்சித்துறை பிறப்பித்த உத்தரவில், உறுப்பு தானம் மிகப் பெரிய அறுவை சிகிச்சை. இதில் இருந்து குணமடைய அதிக காலம் ஓய்வு தேவைப்படுகிறது. உறுப்பு தானம் செய்வது மிகவும் உன்னதமான செயல். இதை மத்திய அரசு ஊழியர்களிடம் ஊக்குவிக்கும் வகையில் அதிகபட்சம் 42 நாட்கள் சிறப்பு விடுப்பு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்த சிறப்பு விடுப்பு தற்போது 30 நாட்களாக உள்ளது. அரசு மருத்துவரின் பரிந்துரையின் பேரில் உறுப்பு தானம் செய்யும் மத்திய அரசு ஊழியருக்கு இனி 42 நாட்கள் சிறப்பு விடுப்பு அளிக்கப்படும். இது உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை சட்டம், 1994-க்கு ஏற்றவகையில் இருக்க வேண்டும். இந்த சிறப்பு விடுப்பு, இதர விடுப்புகளுடன் இணைக்கப்படாது.

உறுப்பு தானத்துக்கான சிகிச்சையை, அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் எடுத்துக் கொள்ள வேண்டும். தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றால், சம்பந்தப்பட்ட துறை தலைவரின் சான்றிதழை அவசியம் சமர்ப்பிக்க வேண்டும் என்று மத்தியப் பணியாளர் மற்றும் பயிற்சித்துறை தெரிவித்துள்ளது.

Chella

Next Post

கர்நாடகத்தில் தமிழ் தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்ட விவகாரம்…..! கனிமொழிக்கு பதிலடி கொடுத்த அண்ணாமலை….!

Fri Apr 28 , 2023
கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலில் சிவமோகா தொகுதியில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளரை ஆதரித்து பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதில் கர்நாடக மாநில பாரதிய ஜனதா கட்சியின் இணை பொறுப்பாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பாக தமிழ் தாய் வாழ்த்து ஒலித்தது. அப்போது திடீரென்று குறுக்கிட்ட கர்நாடக மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை நிறுத்துமாறு அறிவுறுத்தினார், இதனால் திடீரென்று மேடை அமைதியானது. […]

You May Like