fbpx

மகிழ்ச்சி…! மீனவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 4,400 லிட்டராக டீசல் உயர்த்தி வழங்கப்படும்…! தமிழக அரசு அரசாணை…!

தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட மீன்பிடி விசைப்படகுகளுக்கு வழங்கப்படும் வரிவிலக்களிக்கப்பட்ட அதிவேக டீசல் எரியெண்ணெய் அரசால் வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து உயர்ந்து வரும் டீசல் எரியெண்ணெய் விலையினால் மீன்பிடி தொழில் இலாபகரமானதாக இல்லை என்பதால் மீனவர்களின் வாழ்வாதாரமான மீன்பிடித் தொழிலை தொடர்ந்திடும் வகையில், தற்போது வழங்கப்பட்டு வரும் மானிய டீசல் எரியெண்ணெய் அளவினை உயர்த்தி வழங்கிட கோரி அரசுக்கு பல்வேறு மீனவ சங்கங்கள் கோரிக்கைகள் அளித்துள்ளன.

அவர்களின் கோரிக்கையினை ஏற்று, அத்துயரினை போக்கிடும் வகையில், 18.08.2023 அன்று இராமநாதபுரத்தில் நடைபெற்ற மீனவர் நல மாநாட்டில், முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட மீன்பிடி விசைப்படகுகளுக்கு வழங்கப்படும். விற்பனைவரி விலக்களிக்கப்பட்ட அதிவேக டீசல் எரியெண்ணெய் அளவினை, படகு ஒன்றுக்கு ஆண்டொன்றுக்கு 18,000 லிட்டரிலிருந்து 19,000 லிட்டர் வீதமும், இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப்படகுகளுக்கு படகு ஒன்றுக்கு ஆண்டொன்றுக்கு 4,000 லிட்டரிலிருந்து 4,400 லிட்டர் வீதமும் உயர்த்தி வழங்கிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

அவ்வறிவிப்பினை 2024-2025 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தும் விதமாக அரசாணை (நிலை) எண்.141 கால்நடை பராமரிப்பு பால்வளம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத் (மீன்-3(2)) துறை நாள் 17.11.2023 இல் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 4500 விசைப்படகு மீனவர்களும் 13,200 நாட்டுப்படகு மீனவர்களும் பயன்பெறுவார்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

நடிகர் மன்சூர் அலிகான்னுடன் படம் நடிக்க மாட்டேன்... நடிகை த்ரிஷா எடுத்த அதிரடி முடிவு..!

Sun Nov 19 , 2023
நடிகர் மன்சூர் அலிகான் பேச்சுக்கு நடிகை த்ரிஷா கண்டனம் தெரிவித்துள்ளார் ‌ சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ ஒன்றில் நடிகர் மன்சூர் அலிகான் அண்மையில் வெளியான லியோ திரைப்படத்தில் த்ரிஷாவுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு தனக்கு அமையவில்லை என தெரிவித்துள்ளார். அதோடு இப்போதெல்லாம் வில்லனாக நடிக்கும் வாய்ப்பும் தனக்கு கிடைப்பதில்லை. மேலும் நடிகை த்ரிஷா குறித்து பாலியல் ரீதியாக மன்சூர் அலிகான் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு […]

You May Like