fbpx

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி..! முதல் வெற்றியை பதிவு செய்தது இந்தியா..!

மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் முதல் வெற்றியை இந்தியா பதிவு செய்துள்ளது.

இந்திய வீரர் ரோனக் சத்வானி, ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த சேர்ந்த அப்துல் ரகுமானை முதல் சுற்று ஆட்டத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார். இதன்மூலம், 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் முதல் வெற்றியை இந்தியா பதிவு செய்துள்ளது. ஓபன் பிரிவில் வெள்ளை நிறக் காய்களுடன் இந்திய வீரர் சத்வானி விளையாடினார். இவர் இந்திய பி அணியில் இடம்பெற்றிருந்தார். புத்திசாலித்தனமும், பொறுமையும் அதிகம் தேவைப்படும் செஸ் விளையாட்டுப் போட்டியின் இந்த ஆட்டம் 36-வது காய் நகர்த்தலில் வெற்றியை வசப்படுத்தினார். இந்த ஆட்டம் இரண்டரை மணி நேரத்துக்கும் மேலாக நடந்தது.

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி..! முதல் வெற்றியை பதிவு செய்தது இந்தியா..!

வெற்றிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரோனக் சத்வானி, “இதுதான் எனக்கு முதல் ஒலிம்பியாட் போட்டி. எனது பயிற்சியாளருக்கு நன்றி. அவர் சிறந்த பயிற்சியாளர். அனைத்து அணிகளையும் ஒரே போன்று தான் நினைக்க வேண்டும். புதிய யுக்திகளை இந்த ஆட்டத்தில் கையாண்டேன். முதல் சுற்றில் வெற்றி பெற்று இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார். ஆகஸ்ட் 10 வரை சென்னை மாமால்லபுரத்தில் 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. இந்த ஒலிம்பிக் போட்டியை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி சென்னை வருகை தந்திருந்தார். தொடக்க நிகழ்ச்சியில் முதலமைச்ர் முக.ஸ்டாலின், ஆளுநர் ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Chella

Next Post

அப்படி போடு... ரேஷன் கடைகளில் இனி இதை எல்லாம் மக்களுக்கு விற்பனை செய்யக்கூடாது...! தமிழக அரசு சார்பில் அதிரடி உத்தரவு....!

Sat Jul 30 , 2022
நியாய விலைக்கடைகளில் விநியோகம் செய்யப்படும் அத்தியாவசியப் பண்டங்களின் கசிவு மற்றும் தரையில் சிந்தும் பொருட்கள், மீண்டும் விநியோகம் செய்யக்கூடாது என கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து கூட்டுறவுத்துறை அனைத்து மண்டல இணை பதிவாளர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியதாவது; நியாய விலைக்கடைகளுக்கு அனுப்பப்படும் அரிசியின் தரத்தினை அனுப்பும் இடங்களிலேயே சரிபார்த்து தரமானஅரிசியை மட்டுமே நியாய விலைக்கடைகளுக்கு அனுப்பப்படுவதை உறுதி செய்துகொள்ள வேண்டும். நியாய விலைக்கடைகள் உட்புறமும் வெளிப்புறமும் தூய்மையாக இருப்பதை உறுதிப்படுத்த […]

You May Like