fbpx

மாதம் 46000 ரூபாய் சம்பளத்தில், காத்திருக்கும் மத்திய அரசு பணி….! தேர்வு இல்லை உடனே வின்னப்பியுங்கள்….!

Aeronautical development agency நிறுவனம் மத்திய அரசின் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனம் தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிவிப்பில், project assistant பணிக்கு 100 காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இந்த பணியில் சேர விரும்பும் நபர்கள், அரசாங்கத்தால், அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில், BEi B,Tech,B.E, M.Tech, BSc, MSc போன்ற படிப்புகளில் தேர்ச்சி பெற்ற நபர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்ய தகுதி உள்ளவர்களாக கருதப்படுவார்கள்.

மேலும், இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யும் நபர்களின் வயது 25க்குள் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ஒன்றுக்கு, 46,990 ரூபாய் ஊதியமாக வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் இதற்கு விண்ணப்பம் செய்யும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக, தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

தகுதி வாய்ந்த நபர்கள், இதன் அதிகாரப்பூர்வமான வலைதளத்தில் சென்று, விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, முறையாக பூர்த்தி செய்து வரும் 14 9 2023 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் பங்கேற்றுக் கொண்டு, பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

சிக்கலில் அதிமுக..! முன்னாள் எம்.எல்.ஏ. வீடு உட்பட 18 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை..!

Wed Sep 13 , 2023
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. தி.நகர் சத்யா வீடு உள்ளிட்ட அவருக்கு சொந்தமான 18 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று காலை 6.30 மணி முதல் சோதனை நடத்தி வருகிறார்கள். சென்னையில் 16 இடங்களிலும், திருவள்ளூர் மாவட்டத்தில ஒரு இடத்திலும், கோவை மாவட்டத்தில ஒரு இடத்திலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சென்னை தி.நகர் தொகுதியில் 2016-ம் ஆண்டு முதல் 2021 வரை எம்.எல்.ஏ.வாக இருந்தவர் சத்யா அதிமுகவை சேர்ந்தவர். கடந்த […]

You May Like