fbpx

தமிழக அரசு அதிரடி.! கூண்டோடு மாற்றப்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் .!

தமிழக அரசு அண்மைக்காலமாகவே ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து வருவது தொடர்ந்து வருகிறது. ஒரே நாளில் மட்டும் 48 இந்திய அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர். இவர்களில் 16 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு காவல்துறையில் ஐதியாகப் பணியாற்றி வந்தவர் தமிழ் சந்திரன் ஐபிஎஸ். இவர் தற்போது கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு பெற்றதோடு குழந்தைகள் மற்றும் மகள் இருக்கு எதிரான குற்றப்பிரிவில் கூடுதல் டிஜிபியாக பணிபுரிவார் என தமிழக அரசு அறிவித்து இருக்கிறது. மேலும் காவல்துறை அதிகாரி ஜெயஸ்ரீ ஐபிஎஸ் ஐஜியாக பதவி உயர்வு பெற்றிருக்கிறார். இவர் தமிழக காவல்துறை நடவடிக்கை பிரிவில் ஐஜியாக பணியாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் எஸ் பி யாக பணியாற்றியவர்கள் பணியிட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளனர். ராமநாதபுரத்தில் எஸ்.பி ஆக பணியாற்றிய தங்கதுரை ஐபிஎஸ் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு எஸ்.பி ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார் . மேலும் தேனி மாவட்டத்தில் எஸ் பி ஆக பணியாற்றி வந்த டோங்கரே பிரவீன் ரமேஷ் மதுரை மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மதுரையில் எஸ்பியாக இருந்த சிவ பிரசாத் தேனி மாவட்டத்திற்கு சூப்பிர டென்டாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Next Post

கர்நாடகா: கொதிக்க கொதிக்க வெந்நீரை 9 வயது மகள் மீது ஊற்றிய தாய்.! கள்ள உறவுக்கு இடையூறாக இருந்தால் ஆத்திரம்.!

Sun Jan 7 , 2024
கர்நாடக மாநிலத்தில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த சிறுமியின் மீது வெந்நீர் ஊற்றப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக சிறுமியின் தாயை கைது செய்த காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். கர்நாடக மாநிலம் கல்புர்கி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் திருமணமாகி கணவரை இழந்த நிலையில் தனது 9 வயது மகளுடன் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள டவுன் பகுதியில் அமைந்துள்ள விடுதியில் வார்டனாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் […]

You May Like