fbpx

48,000 பாடல்கள்..!! திடீரென பாடுவதை நிறுத்தியது ஏன்..? ஜானகி சொன்ன நெகிழ்ச்சி காரணம்..!!

பலருடைய மனதில் இருக்கும் சோகங்களை மறைய செய்யும் பாடகி ஜானகி, கடந்த 7 ஆண்டுகளாக பாடாமல் இருக்கும் காரணம் என்ன என்பது குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.

அந்த வகையில், பாடகி ஜானகி தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல 17 மொழிகளில் 48,000 பாடல்களை பாடி தன்னுடைய மயக்கும் குரலால் லட்சக்கணக்கான ரசிகர்களை ஈர்த்துள்ளார். தெலுங்கு பிராமண குடும்பத்தில் பிறந்த ஜானகி, குழந்தையாக இருக்கும்போதே பாடத்தொடகிவிட்டார். அதனாலேயே முறையான இசை பயிற்சியை பெற்றிருக்கிறார். சென்னைக்கு இவருடைய குடும்பம் இடம்பெயர்ந்த பிறகு ஏவிஎம் ஸ்டுடியோவில் இணைந்து திரைப்படத்துறையில் பாடல் பாட தொடங்கினார். அதிலும், 1957ஆம் ஆண்டில் வெளிவந்த “விதியின் விளையாட்டு” என்ற படத்தில் இடம்பெற்ற “பெண் என் ஆசை பாழானது ஏனோ” என்ற பாடல் தான் ஜானகியின் முதல் பாடலாக இருந்திருக்கிறது. இந்த பாடல் பாடிய அடுத்த நாளே இவருக்கு தெலுங்கு படத்தில் பாடும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

அதைத் தொடர்ந்து பல மொழிகளில் இவர் பாடி கொண்டிருந்தாலும் 25 ஆண்டுகளில் குழந்தையாகவும், குமரியாகவும், வயதானவர்களின் குரலிலும் பாடி பலரையும் வியக்க வைத்திருக்கிறார். ஒரு சிலருடைய பாடல்கள் எந்த நேரத்தில் கேட்டாலும் ரசிகர்களின் சோகங்கள் கரைந்து ஓடும். இந்நிலையில், அவர் 2016 ஆம் ஆண்டு தான் திரை உலகில் இருந்து விலகுவதாக அறிவித்து ஹைதராபாத்தில் தன்னுடைய மகன் குடும்பத்தோடு வாழ்ந்து வருகிறார். தான் எதற்காக சினிமாவை விட்டு விலகப் போகிறேன் என்று அவர் பேசிய வீடியோ இப்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது‌. அதில் ”எனக்கு திறமை இருக்கிறது. வாய்ப்பு கிடைக்கிறது என்பதற்காக நான் மட்டுமே பாடி புகழையும், பணத்தையும் சம்பாதித்துக் கொண்டே இருப்பதில் எந்த நியாயமும் இல்லை.

வருங்கால சந்ததியினருக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும். யாரும் என்னை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ குறை சொல்வதற்கு முன்பு என் வருங்கால தலைமுறை புகழ்பெற வேண்டும் என்று இசை துறையில் இருந்து ஓய்வு பெற்றுக் கொண்டேன்” என்று பேசி இருக்கிறார். அதோடு பாடகி ஜானகி கடைசியாக நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி படத்தில் இடம்பெற்ற அம்மா பாடலை தான் பாடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read More : கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்படுவது ஏன்..? மருத்துவர் சொல்லும் காரணம்..?

Chella

Next Post

10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாதா மாணவர்கள் நாளை முதல் மறு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்..!

Fri May 10 , 2024
இன்று 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in அல்லது www.dge.tn.gov.in அல்லது https://results.digilocker.gov.in என்ற இணையதளங்கள் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் எனவும், மேலும் பள்ளிகளில் மாணவர்கள் மதிப்பெண்களை பார்த்து தெரிந்து கொள்வதற்காக அனைத்து பள்ளிகளுக்கும் மதிப்பெண்களுடன் கூடிய பட்டியல்களும் அனுப்பப்பட்டுள்ளதாகவும், நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 4 லட்சத்து […]

You May Like