சிட்னியில் போதைப்பொருள் கொடுத்து 5 கொரிய இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக பாஜக பிரமுகர் ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓவர்சீஸ் பிரண்ட்ஸ் ஆஃப் பிஜேபி’யின் முன்னாள் தலைவரான பாலேஷ் தங்கர்(43) ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். கொரியப் பெண்களை குறிவைத்து, வேலைவாய்ப்பு கொடுப்பதாக விளம்பரங்கள் செய்து தனது வலையில் 5 பெண்களை சிக்க வைத்துள்ளார். பின்னர், அவர்களிடம் நெருக்கமாகி, போதைப்பொருள் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. அது மட்டும் இல்லாமல், படுக்கை அறையில் கடிகாரத்தில் கேமராவை மறைத்து வைத்து, உடல் உறவு கொண்டதை ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார். 5 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த தன்கர், 6 வது பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடும்போது, அந்த பெண் சுதாரித்ததால் அந்த பெண் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் தன்கரை கைது செய்து விசாரிக்கையில், இந்த பாலியல் சீண்டல் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மேலும், அவரது மொபைல் போனை சோதனை செய்ததில், பல வீடியோக்கள் சிக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், சிட்னியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் அவர் அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு இறுதியில் தண்டனை அறிவிக்கப்படும் என்றும் சிட்னி மார்னிங் ஹெரால்ட் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.