fbpx

சற்று முன்: 30-ம் தேதி வரை சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு முறை அமலில் இருக்கும்…!

குடியரசு தினத்தை முன்னிட்டு வரும் 30-ம் தேதி நள்ளிரவு வரை சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு முறை அமலில் இருக்கும்

ஆண்டுதோறும் ஜனவரி 26-ம் நாள் குடியரசு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை நடைபெறும். இந்த அணிவகுப்பை காண்பதற்காக வெளிநாட்டு தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாகவும், பொதுமக்களும் கலந்து கொள்ள உள்ளனர்.

அதே போல ஜனவரி 26-ம் தேதி நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்திருந்தது. இந்தியாவின் அழைப்பை ஏற்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரான் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக வருவதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

தமிழகத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு வரும் 30-ம் தேதி நள்ளிரவு வரை சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு முறை அமலில் இருக்கும். அதே போல வரும் 24, 25 மற்றும் 26 ஆகிய நாட்களில் மட்டும் 7 அடுக்கு பாதுகாப்பு முறை அமல்படுத்தப்பட உள்ளது.

Vignesh

Next Post

இந்த 7 மாவட்டங்களிலும் இன்னைக்கு சம்பவம் இருக்கு..!! வானிலை ஆய்வு மையம் அலர்ட்..!!

Sun Jan 21 , 2024
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தென்தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்நிலையில், அடுத்த 3 மணி […]

You May Like