fbpx

5 தேசிய விருதுகளை தட்டிச் சென்ற ’சூரரைப் போற்று’..! சிறந்த நடிகர் சூர்யா..!

நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் 5 தேசிய விருதுகளை வென்றுள்ளது.

டெல்லியில் 68-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. அதில், இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான ‘சூரரைப் போற்று’ திரைப்படம் 5 தேசிய விருதுகளை தட்டிச் சென்றுள்ளது. சிறந்த நடிகராக சூர்யா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சூரரைப் போற்று திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக இந்த கவுரவம் அவரை தேடி வந்துள்ளது. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த அபர்ணா பாலமுரளிக்கும் தேசிய விருது கிடைத்துள்ளது. சூரரைப் போற்று படத்தில் நடித்த அவர் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றுள்ளார்.

5 தேசிய விருதுகளை தட்டிச் சென்ற ’சூரரைப் போற்று’..! சிறந்த நடிகர் சூர்யா..!

சிறந்த திரைக்கதைக்கான விருது சுதா கொங்கராவுக்கும், சிறந்த பின்னணி இசைக்கான விருது ஜி.வி. பிரகாஷூக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த திரைப்படமாகவும் ‘சூரரைப் போற்று’ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. படம் வெளியானபோதே நல்ல விமர்சனங்களைப் பெற்றிருந்த இப்படம் தேசிய விருதுகளை அள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ப, 5 விருதுகளை குவித்திருக்கிறது சூரரைப் போற்று.

5 தேசிய விருதுகளை தட்டிச் சென்ற ’சூரரைப் போற்று’..! சிறந்த நடிகர் சூர்யா..!

ஏர் டெக்கான் நிறுவனம் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான சம்பவத்தைக் கொண்டு, உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய ஹிட் அடித்தது. சூரரைப் போற்று படத்திற்கு கிடைத்திருக்கும் தேசிய விருதுகளுக்காக, தமிழ் திரைத்துறையைச் சேர்ந்த நடிகர், நடிகைகள் மற்றும் தயாரிப்பாளர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். சிறந்த நடிகர் விருதை வென்றிருக்கும் சூர்யாவுக்கும் வாழ்த்துகளை அனுப்பி வருகின்றனர். 

5 தேசிய விருதுகளை தட்டிச் சென்ற ’சூரரைப் போற்று’..! சிறந்த நடிகர் சூர்யா..!

68-வது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் 5 விருதுகளை சூரரைப் போற்று வென்றதையடுத்து, ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில்  #SooraraiPottru ஹேஸ்டேக் மற்றும் #Suriya ஹேஸ்டேக் டிரெண்டாகி வருகிறது. இதுதவிர, வசந்தின் ’சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ படத்திற்கு விருது கிடைத்துள்ளது. யோகிபாபு நடிப்பில் வெளியான ‘மண்டேலா’ படத்திற்கும் சிறந்த திரைக்கதைக்கான விருது கிடைத்துள்ளது.

Chella

Next Post

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடாதவர்களின் எண்ணிக்கை 4 கோடி.. சுகாதாரத்துறை இணை அமைச்சர் தகவல்..!

Fri Jul 22 , 2022
கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் குறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அவர் கூறியதாவது, ஜூலை 18-ஆம் தேதி வரை, அரசு தடுப்பூசி மையங்களில் மொத்தம் 1,78,38,52,566 தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு இலவசமாக போடப்பட்டுள்ளது. இது 97.34 % ஆகும். சுமார் நான்கு கோடி பேர் ஒரு தவணை கூட தடுப்பூசி போடவில்லை.. மார்ச் 16-ஆம் தேதி முதல் சுகாதார பணியாளர்கள், […]
’மக்களே மீண்டும் லாக்டவுன் வரப்போகுது’..!! அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு பரபரப்பு உத்தரவு..!!

You May Like