fbpx

தூள்…! திருமண உதவித்தொகை உள்ளிட்ட 5 திட்டம்…! இ-சேவை மூலமே விண்ணப்பிக்கலாம்…! முழு விவரம்

தமிழ்நாடு மின்‌ ஆளுமை முகமை மூலம்‌ மாற்றுத்திறனாளிகள்‌ நலத்‌ துறையால்‌ செயல்படுத்தப்படும்‌ திட்டங்களுக்கு இ-சேவை தளம்‌ வழியாக மாற்றுத்திறனாளிகள்‌ விண்ணப்பிப்பதற்கு இணையதளம்‌. ஏற்படுத்தப்பட்டுள்ளது. இத்தளம்‌ வாயிலாக தற்போது 5 திட்டங்கள்‌ செயல்படுத்தப்பட்டு வருகிறது. கல்வி உதவித்தொகை விண்ணப்பம்‌, உதவி உபகரணங்கள்‌ பெறுவதற்கான விண்ணப்பம்‌, வங்கி கடன்‌ மானிய விண்ணப்பம்‌, திருமண உதவித்தொகை விண்ணப்பம்‌, மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை விண்ணப்பம்‌ போன்ற விண்ணப்பங்கள்‌ உள்ளன.

மாற்றுத்திறனாளிகளின்‌ சிரமத்தினைபோக்கவும்‌, விண்ணப்பித்த விண்ணப்பத்தின்‌ தற்போதைய நிலையினை உடனடியாக தெரிந்து கொள்ளும்‌ வண்ணம்‌ மாற்றுத்திறனாளிகள்‌ தங்களுக்கு அருகாமையில்‌ உள்ள இ-சேவை மையங்களில்‌ விண்ணப்பிக்கவும்‌ அல்லது http://www.tneseval.tn.gov.in/Citizen/Registration.aspx என்ற இணையதளம்‌ வாயிலாகவும்‌விண்ணப்பித்து பயன்பெறலாம்‌. மேலும்‌ மாற்றுத்திறனாளிகள்‌ மேலே குறிப்பிடப்பட்டுள்ள.

இந்த திட்டங்களில்‌ பயன்பெற ஜூலை-2023 மாத இறுதி வரை இ-சேவை மூலமாகவும்‌ அல்லது மாவட்ட மாற்றுத்திறனாளிகள்‌ நல அலுவலகத்திலும்‌ விண்ணப்பிக்கலாம்‌. ஆகஸ்ட்‌-2023 முதல்‌ மேற்காணும்‌ திட்டங்களுக்கான அனைத்து விண்ணப்பங்களும்‌ இணையதளம்‌ மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்‌.

Vignesh

Next Post

கலைஞர்‌ நூற்றாண்டு விழா முன்னிட்டு.. ஆகஸ்ட் 5-ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்...! ஆட்சியர் அசத்தல் அறிவிப்பு...!

Sat Jul 29 , 2023
தமிழ்நாடு அரசு முன்னாள்‌ முதல்வர்‌ டாக்டர்‌ கலைஞர்‌ அவர்களின்‌ நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின்‌ ஒரு பகுதியாக 100 சிறப்பு மாபெரும்‌ தனியார்‌ துறை வேலைவாய்ப்பு முகாம்களை தமிழ்நாடு முழுவதும்‌ நடத்திட அரசால்‌ அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, காஞ்சிபுரம்‌ மாவட்டத்தில்‌ உள்ள படித்து, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு காஞ்சிபுரம்‌ மாவட்ட நிர்வாகம்‌ மற்றும்‌ மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டும்‌ மையம்‌, காஞ்சிபுரம்‌ இணைந்து காஞ்சிபுரம்‌ பச்சையப்பன்‌ மகளிர்‌ கல்லூரியில்‌ 05.08.2023 சனிக்கிழமை […]

You May Like