fbpx

5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!… காஷ்மீரில் வெளிநாட்டு பயங்கரவாதிகளின் ஊடுருவல் 4 மடங்கு அதிகரிப்பு!

ஜம்மு காஷ்மீர் குப்வாரா மாவட்டத்தில் தேடுதல் வேட்டையின்போது மேலும் 3 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாராவில் இந்திய ராணுவத்தினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நடந்து வருகிறது. அந்தவகையில் கடந்த சில நாட்களுக்கு முன் இந்திய எல்லைப் பகுதிக்குள் தீவிரவாதிகள் ஊடுருவ வாய்ப்புள்ளதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், எல்லை வேலி அருகே ராணுவ வீரர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திடீரென பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதையடுத்து, பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு தொடங்கியது.

இதுதொடர்பாக பேசிய காஷ்மீர் ஏடிஜிபி, குப்வாரா மாவட்டத்தில் நடைபெற்ற என்கவுண்டரில் இதுவரை லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த மேலும் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதன் மூலம் கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து பேசிய காஷ்மீர் காவல்துறை செய்தித்தொடர்பாளர், குப்வாரா காவல்துறை அளித்த குறிப்பிட்ட தகவலின் அடிப்படையில், மச்சில் செக்டாரில் என்கவுன்டர் தொடங்கியது. இந்திய எல்லைப் பகுதிக்குள் தீவிரவாதிகள் ஊடுருவ வாய்ப்புள்ளதாக தகவல் கிடைத்தது. எல்லை வேலி அருகே பயங்கரவாதிகளை ராணுவ வீரர்கள் கண்காணித்தவுடன், பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதையடுத்து, பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு தொடங்கியது என தெரிவித்தார். இதுவரை மொத்தம் 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். முன்னதாக இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். தற்போது மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதை காஷ்மீர் ஏடிஜிபி உறுதிப்படுத்தினார் என கூறினார். இந்த ஆண்டு ஜம்மு காஷ்மீரீல் கொல்லப்பட்ட 46 பயங்கரவாதிகளில் 37 பேர் வெளிநாட்டு பயங்கரவாதிகள் என்றும் ஒன்பது பேர் உள்ளூர்வாசிகள் என்றும் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜம்மு காஷ்மீரில் உள்ளூர் பயங்கரவாதிகளை விட வெளிநாட்டு பயங்கரவாதிகள் நான்கு மடங்கு அதிகமாக கொல்லப்படுவது இதுவே முதல் முறை என்று கூறினார்.

Kokila

Next Post

IPL 2024!… முதல்முறையாக வெளிநாட்டில் வீரர்கள் ஏலம்!… எந்த தேதியில் தெரியுமா?

Fri Oct 27 , 2023
IPL 2024 தொடருக்கான கிரிக்கெட் வீரர்கள் ஏலம் முதன்முறையாக வெளிநாட்டில் நடைபெறவுள்ளது. வரும் டிசம்பர் மாதத்தில் வீரர்களுக்கான ஏலம் துபாயில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடந்து முடிந்த 2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் 16ஆவது சீசனில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5ஆவது முறையாக […]

You May Like