திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே உள்ள கிராமம் ஒன்றில், 5 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவரது வீட்டின் அருகே, 16 வயது சிறுவன் ஒருவன் வசித்து வருகிறான். இந்நிலையில், 16 வயது சிறுவனுக்கு 5 வயது சிறுமி மீது ஆசை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சிறுவன் எப்படியாவது 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்துள்ளான்.
அதன் படி, சிறுவன் 5 வயது சிறுமியை தனியாக அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். என்ன நடக்கிறது என்று கூட தெரியாமல், வலியால் துடித்த சிறுமி, தனது வீட்டிற்க்கு சென்று நடந்தது எல்லாம் விளக்கமாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியில் உறைந்த சிறுமியின் தாய், சம்பவம் தொடர்பாக, முசிறி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல் ஆய்வாளா் வாணிஸ்ரீ மற்றும் போலீசார், 16 வயது சிறுவனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், 16 வயது சிறுவன் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், சிறுவனை கைது செய்து திருச்சியில் உள்ள இளம் சிறாா் சீா்திருத்த பள்ளியில் சோ்த்தனா்.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோா், மகளிா் காவல் நிலையத்தில் சிறுவன் மீது புகாா் அளித்ததால் ஆத்திரம் அடைந்த சிறுவனின் குடும்பத்தினர், சிறுமியின் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் பதறிப்போன சிறுமியின் குடும்பத்தினர், மேலும் இது தொடர்பாக தொட்டியம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, தொட்டியம் போலீசார் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.