பேடிஎம் நிறுவனம் அதன் ஊழியர்களை 50% பணி நீக்கம் செய்ததாக வெளியான செய்திக்கு அந்நிறுவனம் தற்போது விளக்கம் அளித்துள்ளது.
கடந்த சில மாதங்களாகவே பேடிஎம் நிறுவனத்திற்கு மிகவும் கஷ்ட காலம் என்று சொல்லலாம். ஏனென்றால், சமீபத்தில் தான் ரிசர்வ் வங்கியின் பிடியில் சிக்கி பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. இதனை பயன்படுத்தி பல்வேறு வதந்திகளும் அந்நிறுவனத்தின் மீது பரப்பப்படுகிறது. One97 கம்யூனிகேஷன்ஸ் மூத்த நிர்வாகி அதாவது, பேடிஎம் இன் தாய் நிறுவனத்தின் நிர்வாகி பிரவீன் சர்மா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது. இதற்கு முன் அவர் கூகுள் நிறுவனத்தின் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது ஒரு புறம் இருக்க paytm நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த அதிகமானோர் அதாவது 25 முதல் 50% வரை பணியாளர்கள் ஆட்குறைவு செய்யப்பட்டதாக செய்திகள் பரவின. இந்த செய்தி முற்றிலும் தவறானது என paytm நிறுவனம் அதற்கு விளக்கம் கொடுத்துள்ளது. அந்நிறுவனத்தின் மறு சீரமைப்பு முயற்சிகள் மற்றும் செயல்திறன் தொடர்பான சரி செய்தல் ஆகியவை பணிநீக்கங்கள் என தவறுதலாக பேசப்பட்டு வருவதாக paytm நிறுவனம் விளக்கம் கொடுத்துள்ளது.
Read More : கர்ப்பிணி பெண்களுக்கு செம குட் நியூஸ்..!! இனி ரூ.14,000 பெறுவது ரொம்ப ஈசி..!!