பகுதி நேர பணிக்காலத்தில் 50% ஓய்வூதியத்திற்கு எடுத்துக் கொள்ளுதல் தொடர்பாக விடுபட்ட தொழிற்கல்வி ஆசிரியர்களின் விவரங்கள் கோரியுள்ளது பள்ளிக்கல்வித்துறை.
முதன்மைக் கல்வி அலுவலர்களிடமிருந்து தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு அவர்களது பகுதிநேரமாகப் பணிபுரிந்த பணிக்காலத்தில் 50 விழுக்காட்டினை ஓய்வூதியத்திற்கு கணக்கில் எடுத்துக் கொள்ளக்கோரி தொடரப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் விவரங்கள் பெறப்பட்டு அதன்படி அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டு அரசாணை பெறப்பட்டது. இந்த அரசாணையின்படி தொழிற்கல்வி ஆசிரியர்களின் பெயர்ப்பட்டியல் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இப்பட்டியலினை சரிபார்த்து வழக்கு தொடுத்த அனைத்து ஆசிரியர்களது பெயர்களும் உள்ளதா..? என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மேலும் இதே பொருண்மைக்காக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து ஆணை பெற்ற / வழக்கு நிலுவையில் உள்ள / வழக்குத் தொடராத 01.04.2003-க்கு முன்னர் பணிவரன்முறை செய்யப்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற தொழிற்கல்வி ஆசிரியர்களது பெயர்கள் ஏதேனும் விடுபட்டிருந்தால் தற்போது எவர்களது பெயரும் விடுபடாதவாறு அவர்களது விவரத்தை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் விடுபடாமல் தகுந்த ஆதாரத்துடன் பூர்த்தி செய்து முதன்மைக் கல்வி அலுவலரின் ஒப்பமிட்ட நகலுடன் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ள நாட்களில் நேரடியாக பள்ளிக் கல்வி இயக்ககத்தில் ஒப்படைக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பள்ளிக் கல்வி இயக்கத்திற்கு நேரடியாக வரும்போது பட்டியலுடன் வழக்கு தொடுத்த ஆசிரியர்களின் Affidavit, Counter Affidavit, Judgement copy, Contempt affidavit copy எவரது பெயரும் விடுபடவில்லை என்பதற்கான முதன்மைக் கல்வி அலுவலரின் சான்று ஆகியவற்றையும் கொண்டுவர வேண்டும் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
இணைப்பு; https://drive.google.com/file/d/1DVPTkYTXuuituZyLZnh_pPlpWJy-NRJx/view?usp=drivesdk