fbpx

மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 50 சதவீத பள்ளி மானிய தொகை…!

மத்திய கல்வி அமைச்சகத்தின், திட்ட ஒப்புதல் குழு 2023-24ஆம் ஆண்டிற்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ் தொடர் செலவினத்திற்காக UDISE 2021-22ன்படி பள்ளி மாணவர்களின் எண்ணிக்கைக் கேற்ப அரசு பள்ளிகளுக்கு பள்ளி மானியம் பரிந்துரை வழங்கியுள்ளது. மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகளின் படி 50சதவீதம் பள்ளி மானியம் ஏற்கனவே ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வாயிலாக விடுவிக்கப்பட்டுள்ளது.

மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகளின் படி மீதமுள்ள 50 சதவீத பள்ளி மானிய தொகையினை அனைத்து அரசு பள்ளிகளுக்கு வழங்கிடும் வகையில் ரூ. 63,20,72,500(ரூபாய் அறுபத்து மூன்று கோடியே இருபது இலட்சத்து எழுபத்திரண்டாயிரத்து ஐநூறு மட்டும்) பள்ளிக் கல்வி இயக்குநருக்கு விடுவிக்கப்பட்டு, மானியத் தொகை பள்ளிக் கல்வி இயக்குநரின் வங்கி கணக்கிற்கு பெறப்பட்டுள்ளது.

மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகளின்படி மீதமுள்ள 50சதவீதம் பள்ளி மானிய தொகையினை இணைப்பில் கண்டவாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அவர்களின் வங்கி கணக்கிற்கு பணப்பரிமாற்றம் (Fund Transfer) செய்திட பள்ளிக் கல்வி இயக்குநரின் நேர்முக அலுவலருக்கு ஆணை வழங்கப்படுகிறது. இந்நிதியினை ஆசிரியர்களுக்கு வழங்கப்படவுள்ள Tablet-க்கு தேவையான SIM-ற்கான ஜுன் 24 மாதத்திற்கான தொகையினை மட்டும் (Rs.110/-per Teacher) பள்ளி மானியத்திலிருந்து மேற்கொள்ள வேண்டும். பள்ளி மானியத் தொகையினை மேற்கூறிய முன்னுரிமை தவிர வேறு எந்த செயல்பாடுகளுக்கும் பயன்படுத்தாமல் உரிய காலத்திற்குள் நிதியினை பயன்படுத்த அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.

Vignesh

Next Post

ஆசிரியர்களுக்கான தேசிய விருதுகள் 2024... ஜுன் 20-ம் தேதி கடைசி நாள்...!

Wed May 22 , 2024
ஆசிரியர்களுக்கான (உயர்கல்வி) தேசிய விருதுகள் 2024 பரிந்துரைகளுக்கான இணையதளத்தை உயர்கல்வித்துறை செயலாளர் தொடங்கி வைத்தனர். பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை கல்வி அமைச்சகத்தின் உயர்கல்வித் துறை வெளியிட்டுள்ளது. தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பம் சாரா உயர்கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்கள் மற்றும் பாலிடெக்னிக் நிறுவனங்களின் ஆசிரியர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படும். பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், கட்டடக்கலை; கணிதம், உடல் கல்வியியல், உயிரி அறிவியல், வேதியியல் அறிவியல், மருத்துவம், மருந்தியல், கலை மற்றும் சமூக […]

You May Like