நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின்நிலையத்தில் அறிவியல் பிரிவு அதிகாரி வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் 50 சவரன் நகையை கொள்ளையடித்துச் சென்றான்.
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அறிவியல் பிரிவு அதிகாரியாக பணியாற்றிய அசோகன் கர்நாடக மாநிலத்தில் செயல்பட்டு வரும் கைகா அணுமின்நிலையத்திற்கு பணி மாறுதல் பெற்று 1ம் தேதி கர்நாடகம் சென்றுள்ளார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட கொள்ளையர்கள் திருட்டு சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர்.
கூடங்குளத்தில் உள்ள தன் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தோடு கர்நாடக மாநிலத்தின் உத்தரகன்னடாவில் உள்ள கைகா அணுமின்நிலையம் அமைந்துள்ள கிராமத்திற்கு குடியேறியுள்ளார். இந்நிலையில் இன்று காலை அவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. இது பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அசோகனின் வீட்டுக்கு வந்த நபர்கள் அவரது எண்ணைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். 50 சவரன் தங்க நகைகள் வைத்திருந்ததாக அவர் கூறியிருக்கின்றார்.
பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த நகைகளை கொள்ளையடித்துச் சென்றிருக்கலாம் என்று போலீசார் தரப்பில் கூறப்படுகின்றது. இதே போல ராமன் என்பவர் வீட்டுக்கு சென்று கொள்ளையடிக்க முயற்சிகள் நடந்துள்ளது. இது பற்றி ராமன் அளித்த புகாரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூடங்குளம் அணுமின் நிலைய அதிகாரிகள் குடியிருப்பு பகுதிக்குள் வெளி நபர்கள் உள்ளே நுழைவது எளிதல்ல. பாதுகாவலர்கள் போடப்பட்டு யார் வந்தாலும் அங்கு கையெழுத்திட்டுதகவல்களை பதிவு செயயப்பட வேண்டும். பாதுகாப்பை மீறி மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.